எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

பிரபலமான வாகனங்களை காப்பயடித்து புதிய வாகனங்களை உருவாக்குவது சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு ரோல்ஸ் ராய்ஸ், பெண்ட்லீ, டொயோட்டா, மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் போலி மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறோம்.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

இவ்வளவு ஏன் நம் நாட்டின் பிரதான காராக விளங்கும் மாருதி 800-ஐ கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கார் மட்டுமின்றி பைக்குகளின் போலி மாடல்களும் அவ்வப்போது சீனாவில் அறிமுகமாகுகின்றன.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

இதற்கு ஒரு உதாரணமாக ராயல் என்பீல்டு ஹிமாலயனின் போலி மாடலை சமீபத்தில் நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 2016 டுகாட்டி பனிகளே 959 பைக்கை காப்பியடித்து உருவாக்கப்பட்ட சீன பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

இந்த காப்பி டுகாட்டி பைக்கை மோக்ஸியோ மோட்டார் என்ற சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த போலி பைக்கிற்கு மேக்ஸியோ 500ஆர்ஆர் என பெயர் வைத்துள்ளனர். பைக்கின் தோற்றம் மட்டுமில்லாமல் டுகாட்டி பனிகளே பைக்குகளுக்கு வழங்கப்படும் சிவப்பு நிறம் அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளது.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

இதனால் சற்று தொலைவில் இருந்து பார்த்தால் எவர் ஒருவரும் நிச்சயம் இது டுகாட்டி பனிகளே பைக் தான் என நம்பிவிடுவர். ஆனால் இயக்க ஆற்றலில் இரண்டிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

டுகாட்டி பனிகளே பைக்குகளின் செயல்திறனை பற்றி கூற வேண்டுமென்றால், இன்று முழுக்க முழுக்க கூறி கொண்டே தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு விஷயங்கள் உள்ளன. பனிகளே பைக்குகளில் 955சிசி, எல்-ட்வின், லிக்யூடு-கூல்டு என்ஜினை டுகாட்டி நிறுவனம் பொருத்துகிறது.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 157 பிஎச்பி மற்றும் 9,000 ஆர்பிஎம்-இல் 104.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் வெறும் 200 கிலோ எடையில் பனிகளே பைக் மாடல்களை டுகாட்டி நிறுவனம் வடிவமைக்கிறது.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

இதன் செயல்படுதிறனிற்கு இந்த சீன போலி மாடல் கிட்ட கூட நெருங்க முடியாது. மேக்ஸியோ 500ஆர்ஆர் பைக்கில் 471சிசி, 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 47.5 பிஎஸ் மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 43 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

இந்த சீன போலி பைக்கின் அதிகப்பட்ச வேகம் 165kmph ஆகும். இதில் மணிக்கு 100கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிட முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி பைக்காக இருந்தாலும் இந்த எண்கள் நம்மை ஆச்சிரியப்படுத்துகின்றன.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

ஆனால் இந்த போலி டுகாட்டி பனிகளே பைக்கின் இயக்க ஆற்றல் ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளை காட்டிலும் குறைவாகும். 500சிசி-க்கும் குறைவான என்ஜின், 50 பிஎச்பி-க்கும் குறைவான இயக்க ஆற்றல் என இருந்தாலும், மேக்ஸியோ 500ஆர்ஆர் பைக்கின் இயந்திர பாகங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எது டுகாட்டி பைக் என்றே கண்டுப்பிடிக்க முடியல!! சீனாவின் போலி டுகாட்டி பனிகளே பைக்...

ப்ரேக்கிற்கு முன் சக்கரத்தில் 320மிமீ-இல் இரட்டை டிஸ்க்குகள் உடன் ஆர காலிபர்களும், பின் சக்கரத்தில் 260மிமீ-இல் ஒற்றை டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன. டுகாட்டி பனிகளே பைக்கும் 320மிமீ முன்பக்க டிஸ்க்குகள் உடன் தான் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
China’s Ducati Panigale copycat superbike makes less power than a Royal Enfield Interceptor (Maxiao 500RR).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X