அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

கிரிக்கெட் வீரர் டோனி புதிது மாற்றப்பட்ட அவரது யமஹா ஆர்டி350 (Yamaha RD350) பைக்கை டெலிவரி பெற்றிருக்கின்றார். இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

எம்எஸ் தோனி ஒரு மிகப் பெரிய வாகன ஆர்வலர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இதுகுறித்த தகவல் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பலருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்டிருப்பதைப் போன்று பல மடங்கு காதல் வாகனங்கள் மீது அவர் கொண்டிருக்கின்றார் என்பது தெரியும்.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

குறிப்பாக, தோனிக்கு விண்டேஜ் ரக வாகனங்கள் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் நிகழ்வு தற்போது அரங்கேறியிருக்கின்றது. கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனி, அவரது பழைமையான இருசக்கர வாகனங்களில் ஒன்றான யமஹா ஆர்டி350 மோட்டார்சைக்கிளை தற்போது புதிது போன்று மீட்டெடுத்திருக்கின்றார்.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

புதிது போன்று மீட்டெடுக்கப்பட்டிருக்கும் பைக் தற்போது ஒர்க்ஷாப்பில் இருந்து அவரது கைகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. ஒப்படைக்கப்பட்ட பைக்கை அவர் டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தோனி அவரது வீட்டில் வைத்து மீட்டெடுக்கப்பட்ட யமஹா ஆர்டி350 பைக்கை பரிசோதித்து பார்த்திருக்கின்றார்.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

யமஹா நிறுவனம் ஆர்டி 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் 1983ம் ஆண்டிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. அந்த நேரத்தில் இதுவே மிகுந்த அதி-திறன் வெளிப்படுத்தும் மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்தது. 350 சிசி பாரல்லல் ட்வின், டூ-ஸ்ட்ரோக் மோட்டாரே இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த நேரத்தில் இரு விதமான தேர்வுகளில் ஆர்டி350 பைக் விற்பனைக்கு வழங்கப்பட்டது.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

எல்டி மற்றும் எச்டி என இரு விதமான தேர்வுகளிலேயே அப்பைக் விற்பனைக்குக் கிடைத்தது. இதில் எல்டி என்பது குறைவான டார்க் என்பதையும், எச்டி என்பது உயர் டார்க்கையும் வெளியேற்றும் என்பதைக் குறிக்கின்றது. எல்டி தேர்வு 27 பிஎச்பி திறன் வரையிலும், எச்டி தேர்வு 31 பிஎச்பி வரையிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

அதேநேரத்தில் ஜப்பான் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்த இதே மோட்டார்சைக்கிள் 40 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருந்தது. இதுபோன்ற அதீத திறன்களால் அந்த காலக் கட்டத்தில் மிகுந்த அதி-வேக பைக்காக இது காட்சியளித்தது. மோட்டார்சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 160கிமீ ஆகும்.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

இதுமாதிரியான வசதிகளின் காரணத்தினாலேயே ஆர்டி350 தற்போதும் இந்திய இளைஞர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகனமாக தென்படுகின்றது. இதுமாதிரியான ஓர் சிறப்பு வாய்ந்த இருசக்கர வாகனத்தையே தோனி தற்போது புதிது போன்று மீட்டெடுத்திருக்கின்றார்.

யமஹா நிறுவனம் அதன் ஆர்டி350 பைக்கை டிஸ்க் பிரேக் வசதி உடன் விற்பனைக்கு வழங்கவில்லை. ஆனால், தற்போது தோனி வைத்திருக்கும் யமஹா ஆர்டி350 பைக்கில் டிஸ்க் பிரேக் முதல் எல்இடி மின் விளக்கு உட்பட பல்வேறு நவீன கால அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

தோனி இடத்தில் யமஹா ஆர்டி 350 பைக் மட்டுமின்றி இன்னும் பல விலையுயர்ந்த மற்றும் அரிய வகை இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. கவாஸாகி நிஞ்ஜா எச்2 (Kawasaki Ninja H2), கான்ஃபெடரேட் எக்ஸ்132 ஹெல்கேட் (Confederate X132 Hellcat), கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14ஆர் (Kawasaki Ninja ZX-14R), ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் (Harley Davidson Fat Boy) உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் அவரிடத்தில் இருக்கின்றன.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

இதில், தோனி வைத்திருக்கும் பைக்குகளிலேயே கான்ஃபெடரேட் எக்ஸ்132 ஹெல்கேட் மிக மிக விலை உயர்ந்ததாக காட்சியளிக்கின்றது. இந்த பைக்கின் இந்திய மதிப்பு ரூ. 60 லட்சம் என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக வெறும் 150 யூனிட்டுகள் மட்டுமே இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டன.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

இதில் ஒன்றையே தற்போது தோனி வைத்திருக்கின்றார். இவர் மட்டுமின்றி, பிராட் பிட், ரையன் ரெனால்ட்ஸ், டேவிட் பெக்கம் மற்றும் டாம் க்ரூஸ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த பைக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மோட்டார்சைக்கிளில் 2.2 லிட்டர் வி-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 121 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அடேங்கப்பா புதுசாக்கிட்டாரே... புதிதுபோல் மாற்றப்பட்ட Yamaha RD350 பைக்கை டெலிவரி எடுத்த டோனி!

இந்த பைக்குகளை வைத்தே தோனி வாகனங்கள் மீது எந்தளவுக்கு காதல் கொண்டிருக்கின்றார் என்பது உங்களால் உணர்ந்திருக்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம். இவரிடத்தில் விண்டேஜ் மற்றும் அரிய வகை பைக்குகள் மட்டுமில்லைங்க கார்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cricketer dhoni takes delivery of his restored yamaha rd 350 bike
Story first published: Saturday, November 27, 2021, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X