டக்கார் ராலியின் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

டக்கார் ராலியின் 3வது ஸ்டேஜ் பந்தயத்தை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி விறுவிறுப்பான நிலையை நோக்கி செல்கிறது. இன்று நடந்த மூன்றாவது ஸ்டேஜ் பந்தயமானது 629 கிமீ தூரத்திற்கு நடந்தது. இதில், 403 கிமீ தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் அந்தஸ்துடன் குறிப்பிடப்பட்டது. இதில், 78 சதவீதம் மணல் பாங்கான பகுதியாக அமைந்தது.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

இந்த ஆண்டு மணல் மடிப்புகள் கொண்ட பாலைவனமும், அதில் திசையை கண்டறிந்து செல்வதும் தொடர்ந்து வீரர்களுக்கு சவாலாக அமைந்து வருகிறது. முதலில் மணல் பாங்கான பகுதியாக இருந்தாலும், இறுதியில் மண் சார்ந்த நிலப்பகுதியை அடைந்ததும், வீரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

நடப்பு ஆண்டு டக்கார் ராலி போட்டியில் ஷெர்கோ ஃபேக்டரி ராலி டீம் சார்பில் பங்கு கொண்டு வரும் இந்திய வீரர் ஹரீத் நோவா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்றைய மூன்றாவது ஸ்டேஜ் பந்தயத்தில் 27வது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறார்.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கு கொண்டு வரும் இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் இன்றைய மூன்றாவது ஸ்டேஜ் பந்தயத்தில் 36வது இடத்தை பதிவு செய்தார். ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியின் பிற வீரர்களான ஜாக்கியம் ரோட்ரிக்கஸ் மற்றும் செபாஸ்டியன் பஹ்லர் ஆகியோர் முறையே 20 மற்றும் 21 இடங்களை பிடித்தனர்.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

டக்கார் ராலியில் தனிநபர் பைக் பிரிவில் பங்குகொண்டுள்ள ஆசிஷ் ராவ்ரேன் ஒட்டுமொத்த பைக் பிரிவில் 83வது இடத்தையும், தனிநபர் மோடுல் பிரிவில் 27வது இடத்தையும் பிடித்தார்.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

இன்றைய போட்டியில் பைக் பிரிவில் ரெட்புல் கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் டோபி பிரைஸ் போர்ட் முதல் இடத்தையும், மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா டீம் வீரர் கெவின் பெனவிட்ஸ் இரண்டாது இடத்தையும், ரெட்புல் கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் மேத்தியாஸ் வாக்னர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

டக்கார் ராலியில் 3வது ஸ்டேஜ் முடிவுகள்... முன்னேற்றப் பாதையில் இந்திய வீரர்கள் !

இன்று நடந்த மூன்றாவது ஸ்டேஜில், க்வாட் வாகன பிரிவில் டிராகன் ராலி டீம் வீரர் நிக்கோலஸ் கேவிக்லியாசோவும், கார் பிரிவில் நஸீர் அல் அத்தியா - மேத்யூ பாமெல் இணையும், இலகு எடை வாகன பிரிவில் சவூத் ரேஸிங் கன்-ஏஎம் அணி வீரர் பிரான்சிஸ்கோ லோபஸ் கன்டர்டோ மற்றும் ஜூவான் பாப்லோ லாட்ராச் வினக்ரேவும், டிரக் பிரிவில் சியார்ஹை விஸோவிச், பாவெல் ஹரனின் மற்றும் ஆன்டன் ஸப்ரோசங்கா ஆகியோரும் முதல் இடத்தை பிடித்தனர்.

Most Read Articles
--
English summary
Stage 3 of the 43rd Dakar Rally ongoing in Saudi Arabia has come to an end. Today's stage was won by the 2019 Dakar Rally champion Toby Price riding for Red Bull KTM Factory Team. Finishing in a close second is Kevin Benavides riding for Monster Energy Honda Team 2021. Matthias Walkner riding for Red Bull KTM Factory Team finished 3rd place in today's stage.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X