டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

டக்கார் ராலியின் ஆறாவது ஸ்டேஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம் அடைந்தார். ஆறாவது ஸ்டேஜ் முடிவுகள் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர்கள் சி.எஸ்.சந்தோஷ் மற்றும் ஆசிஷ் ராவ்ரேன் ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்து போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

இந்த நிலையில், இந்திய வீரர் ஹரீத் நோவா ஆறாவது சுற்றை நிறைவு செய்து அடுத்த ஸ்டேஜ் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். நடப்பு டக்கார் ராலி பந்தயத்தில் மிகவும் மோசமான ஸ்டேஜ் போட்டியாக ஐந்தாவது நிலை இருந்தது.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

எனவே, ஆறாவது ஸ்டேஜ் போட்டியை 90 நிமிடங்கள் தாமதமாக துவங்கப்பட்டது. மேலும், ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்திற்கான தூரம் 100 கிமீ வரை குறைக்கப்பட்டது. இதனால், வீரர்களுக்கு சற்றே ஆசுவாசம் ஏற்பட்டது.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

இருப்பினும், ஆறாவது ஸ்டேஜ் போட்டியிலும் அதிக மணல் குன்றுகள் நிறைந்த பாலைவன பகுதியை கடக்கும் நிலை இருந்தது வீரர்களுக்கு மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்த போட்டியில் குறிப்புகளை வைத்து வழித்தடத்தை சரியாக கண்டறிந்து செல்வது வீரர்களின் திறனை சோதிக்கும் முக்கிய விஷயமாக அமைந்தது.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

டக்கார் ராலியின் ஆறாவது ஸ்டேஜ் போட்டியில் மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா ராலி டீம் வீரர் ஜோன் பரேடா போர்ட் முதல் இடத்தை பிடித்தார். மான்ஸ்ட்டர் எனெர்ஜி யமஹா ராலி டீம் வீரர் ராஸ் பிராஞ்ச் இரண்டாவது இடத்தையும், கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் டேனியல் சான்டர்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் ஜாக்கியம் ரோட்ரிகஸ் 8வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 21வது இடத்தையும் பிடித்தனர். ஆறு ஸ்டேஜ்களின் கணக்கீட்டின்படி, ஜாக்கியம் ரோட்ரிகஸ் 17வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

பிரான்ஸ் நாட்டின் ஷெர்கோ அணி சார்பில் பங்கு கொண்டு வரும் இந்திய வீரர் ஹரீத் நோவா ஆறாவது ஸ்டேஜ் பந்தயத்தில் 27வது இடத்தை பிடித்தார். அவரது அணியின் சக வீரர்களான லாரென்ஸோ சான்டோலினோ மற்றும் ருய் கான்கால்வ்ஸ் ஆகியோர் முறையே 17வது மற்றும் 35வது இடத்தை பிடித்தனர்.

டக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்!

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ரெட்புல் கேடிஎம் ஃபேக்டரி டீம் வீரர் டோபி பிரைஸ் இந்த ஆண்டு போட்டியிலும் முன்னிலை பெற்று இருக்கிறார். மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா அணி வீரர்கள் கெவின் பெனவிட்ஸ் மற்றும் ஜோஸ் இக்னசியா கொரென்ஜோ புளோரிமோ இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இன்று வீரர்களுக்கு ஓய்வு நாள். நாளை மீண்டும் ஏழாவது ஸ்டேஜ் போட்டி நடக்கிறது.

Most Read Articles
English summary
The sixth stage of the 2021 Dakar Rally has come to a close ahead of the rest day for the event. The organizers decided to delay the start of Stage 6 by 90 minutes and shorten the special stage distance by 100 kilometers. The decision was made to help participants recover from Stage 5, which was one of the toughest in this year's calendar.
Story first published: Saturday, January 9, 2021, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X