பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் டிஏஒ 703 என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. மொத்தம் எத்தனை ஸ்கூட்டர்கள் அறிமுகமாகி உள்ளன என்பது கூட சரியாக தெரியவில்லை.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஏத்தர் 450எக்ஸ் மற்றும் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் உள்பட சில இ-ஸ்கூட்டர்கள் தற்சமயம் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக உள்ளன. இப்படி இருக்க சீனாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்அப் நிறுவனமான டிஏஒ (DAO) அதன் 703 இ-ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ப்ரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இதன் விலையை டிஏஒ நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. டிஏஒ 703 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பேட்டரி பி.எல்.டி.சி மோட்டாரில் 3.5 கிலோவாட்ஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. டார்க் திறனை தயாரிப்பு நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. முழு சார்ஜில் 100கிமீ வரையில் இயங்கக்கூடிய இந்த இ-ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லலாம்.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

9 இன்ச்சில் எல்சிடி திரையை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பின்னோக்கி செல்லுவதற்கும் கியர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்டார்ட் ஸ்விட்ச்சிற்கு பதிலாக, ஸ்மார்ட்டான ரிலீஸ் சிஸ்டத்தை 703 இ-ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

பெரிய இறக்கங்களில் இறங்கும் போது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மோட்டாரின் ஆற்றல் வழங்கப்படுவது தானாக நிறுத்தப்படும். இவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல், சாவியில்லா ஸ்டார்ட், வாகனம் திருடு போனால் எச்சரிக்கும் வசதி, ஸ்கூட்டர் இருக்கும் பகுதியை அறிதல், எல்இடி விளக்குகள் உள்ளிட்டவையும் டிஏஒ 703 இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

சஸ்பென்ஷன் பணிக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய ஷாக்குகளும் உள்ளன. டிஸ்க் ப்ரேக்குகள் வாகனத்தை நிறுத்த உள்ளன.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இ-ஸ்கூட்டரின் மொத்த எடை 85 கிலோ, பேட்டரி இல்லாமல். பேட்டரியின் எடையும் பெரிய அளவில் இருக்காதுங்க. வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் இள நீலம் என்ற நிறங்களில் டிஏஒ 703 ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

நமக்கு தெரிந்தவரையில் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப்பிற்கு இணையாக ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சத்திற்குள்ளான விலை இதற்கு நிர்ணயிக்கப்படலாம். மொத்தத்தில் மேற்கூறப்பட்ட முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சரியான போட்டியாக விளங்கும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
DAO 703 E-scooter Launched, Should The TVS iQube Be Worried? Read Answer In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X