சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!

டிஏஓ நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர்கள் குறித்த நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

நேற்றைய தினம் (ஏப்ரல் 22) 703 எனும் பெயர் கொண்ட அதி-வேக திறனுடைய மின்சார ஸ்கூட்டரை டிஏஓ இவி டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சரவெடி வெடிக்கும் வகையில் இன்றைய தினமும் இந்நிறுவனம் புதுமுக மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

இன்றைய தினம் மட்டுமே ஒட்டுமொத்தமாக மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை டிஏஓ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்று மின்சார வாகனங்களும் குறைந்த ஓடும் வேகம் திறன் கொண்டவை ஆகும். வித்யுத் 106, வித்யுத் 108 மற்றும் இசட்ஓஆர் 405 (ZOR 405) ஆகிய மின்சார வாகனங்களையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

இதில், வித்யுத் 106 மற்றும் வித்யுத் 108 ஆகிய இரண்டும் ஸ்கூட்டர் ரக மின் வாகனம் ஆகும். ஸோர் 405 மொபட் ரக மின்சார வாகனம் ஆகும். இவற்றில் முதலில் மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய தகவலைப் பார்த்துவிடலாம்.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

வித்யுத் 106 மற்றும் வித்யுத் 108 ஆகிய இரண்டும் வெவ்வேறு உருவ அமைப்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால், மின் மோட்டார் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் இரண்டும் இரட்டையர்களைப் போன்று காட்சியளிக்கின்றன. இரு மின்சார ஸ்கூட்டர்களிலும் 250 வாட் திறன் கொண்ட மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளன.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. இதேபோன்று, 1.38kWh திறன் கொண்ட பேட்டரியே இரு ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

உருவ அமைப்பில் இரு ஸ்கூட்டர்களும் மாறுபட்டதாக இருப்பதாக நாங்கள் முன்னரே கூறியிருந்தோம். அந்தவகையில், வித்யூத் 106 மின்சார ஸ்கூட்டரில் மாறுபட்ட உருவ அமைப்பை வழங்குவதற்காக நிறுவனம் பின் பக்க பயணி சாய்ந்து கொள்ளும் வகையில் பேக் ரெஸ்ட் அமைப்பை வழங்கியிருக்கின்றது.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

இந்த அம்சம் வித்யூத் 108 மாடலில் வழங்கப்படவில்லை. இரு மின்சார ஸ்கூட்டர்களிலும் எல்இடி தரத்திலான மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப் தொடங்கி பின்பக்க சிவப்பு விளக்கு வரை எல்இடி மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

டிஏஓ ஸோர் 405:

டெலிவரி சேவைக்கு பயன்படுத்தும் வகையில் கேரியர் வசதியுடன் வந்திருப்பதே இந்த ஸோர் 405 மின்சார வாகனம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த மின்சார வாகனத்திலும் 250 வாட் மின் மோட்டார் மற்றும் 1.38kWh பேட்டரி பேக் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

இந்த மொபட்டை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இவ்வாகனத்தின் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது உயர்-தர பிரேக்கிங் வசதியை வழங்க உதவும். தற்போது அறிமுகமாகியிருக்கும் மூன்று மின்சார வாகனங்களும் குறைந்த வேகம் திறன் கொண்டவை என்பதால் இவற்றை இந்தியாவில் பயன்படுத்த பதிவு சான்றோ அல்லது ஓட்டுநர் உரிமமோ தேவைப்படாது.

சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வியந்து நிற்கும் இந்திய மின்சார வாகன சந்தை!!

தற்போது டிஏஓ நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் மட்டுமே செய்திருக்கின்றது. இன்னும் விற்பனைக்குக் கொண்டுவரவில்லை. விரைவில் விற்பனைக்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நேரத்தில் இந்த மின்வாகனங்களின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
DAO Reveals 3 New Low-Speed e-Scooters. Read In Tamil.
Story first published: Thursday, April 22, 2021, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X