இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

இந்திய சந்தைக்கான டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் தொடர்பான டீசர் படத்தினை டுகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

தற்போது டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளதால் டுகாட்டியின் இந்த நாக்டு சூப்பர்பைக் இந்திய சந்தையில் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். இதற்கு முன்னதாக இந்த பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்கும் பணியினை ஏற்கனவே டுகாட்டி இந்தியா நிறுவனம் ஆரம்பித்துவிட்டது.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

என்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் தொகுப்புகள் உள்ளிட்டவை அனைத்தையும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4, டுகாட்டியின் மற்றொரு பிரதான மாடலான பனிகளே வி4-இல் இருந்து பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

நாக்டு மோட்டார்சைக்கிள் ஒன்றில் பை-விமான இறக்கைகள் வழங்கப்படுவது ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் மட்டும் தான் என்று நினைக்கிறேன். ஸ்டைல் மட்டுமின்றி பனிகளே வி4-இல் வழங்கப்படும் பேஸ் மற்றும் எஸ் என்ற இரு வேரியண்ட்கள் தான் டுகாட்டியின் இந்த நாக்டு மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படுகின்றன.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கின் டாப் வேரியண்ட்கள் கூடுதலாக ஹோலின்ஸ் எலக்ரானிக் சஸ்பென்ஷன், ஹோலின்ஸ் ஸ்டேரிங் டேம்பர் மற்றும் எடை குறைவான மர்சேஷின் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளன.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

டுகாட்டியின் நாக்டு மோட்டார்சைக்கிள் பிரிவிலேயே ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 கூர்மையான மற்றும் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்ட மாடலாக விளங்குகிறது. தடிமனான லைன்கள் மற்றும் ஒற்றை-பக்க ஸ்விங்கார்ம் உள்ளிட்டவை இந்த பைக்கை உலகின் தற்போதைய அழகான மோட்டார்சைக்கிளுள் ஒன்றாக முன்னிறுத்துக்கின்றன.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

அதுமட்டுமின்றி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 2019 ஐக்மா கண்காட்சியில் மிகவும் அழகான மோட்டார்சைக்கிளுக்கான விருதை பெற்றுள்ளது. இரு பக்கவாட்டிலும் மோட்டோஜிபி ஸ்டைலில் பொருத்தப்பட்டுள்ள இறக்கைகள் மணிக்கு 270கிமீ வேகத்திலும் கீழ்நோக்கிய அழுத்தத்தை 28 கிலோவாக குறைக்கின்றன.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

இத்தாலி நாட்டை சேர்ந்த டுகாட்டி மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் பைக்கிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் புதியதாக டார்க் ஸ்டீல்த் மேட் கருப்பு நிற தேர்வை வழங்கி இருந்தது.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

பெரிய ரேடியேட்டரை சுற்றிலும், கால் வைக்கும் பகுதி மற்றும் எக்ஸாஸ்ட் , கால் வைக்கும் பகுதி மற்றும் எக்ஸாஸ்ட் கவர் பகுதிகளில் இந்த கருப்பு நிற பெயிண்ட் தேர்வில் சில்வர் நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பைக்கில் கிராஃபிக்ஸிலும் சிறிது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

இவை கருப்பு நிற பெயிண்ட்டிற்கு மிகவும் எடுப்பாக உள்ளன. இந்த டார்க் ஸ்ட்லீத் கருப்பு நிறத்தேர்வு ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த டுகாட்டி பைக்கில் 1,103சிசி, வி4 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்திய இளைஞர்களை தேடிவரும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4!! அறிமுகம் விரைவில்...

அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 205 பிஎச்பி மற்றும் 9,500 ஆர்பிஎம்-இல் 122 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை பெறுகின்ற ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் டுகாட்டியின் சிவப்பு மற்றும் அடர் கருப்பு என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இந்த டுகாட்டி பைக்கின் விலை ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Streetfighter V4 Teased For India; Launch Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X