2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் வி4எஸ் பைக்குகளை டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

செயல்திறன்மிக்க ஸ்ட்ரீட் நாக்டு மோட்டார்சைக்கிள்களான 2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.19.99 லட்சம் மற்றும் ரூ.22.99 லட்சம் என நிர்ணயிக்கப்ப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

இந்த 2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகள் ஏகப்பட்ட அப்கிரேட்களை பெற்றுள்ளன. இதில் புதிய எலக்ட்ரானிக்குகள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட மோட்டோஜிபி-ஆல் தருவிக்கப்பட்ட பவர் யூனிட் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

டுகாட்டி பிராண்டின் பிரதான நாக்டு மோட்டார்சைக்கிள் வரிசையாக ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 லைன்-அப் உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு பைக்குகளில் 2021 வி4 டுகாட்டியின் சிவப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

ஆனால் வி4எஸ் மோட்டார்சைக்கிள் ஆனது டுகாட்டி சிவப்பு மற்றும் டார்க் ஸ்டீல்த் என்ற இரு நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரு டுகாட்டி பைக்குகளுக்கான முன்பதிவுகளும் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மோட்டார்சைக்கிள் டெலிவிரி செய்யும் பணிகள், தற்போதைய அசாதாரண சூழல் முடிவுக்கு வந்தவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

2021 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் வி4எஸ் பைக்குகளில் ஒரே மாதிரியான 1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் 90-கோண வி4 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கூறியதுபோல் இந்த என்ஜின் 2021ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 206 பிஎச்பி மற்றும் 9,500 ஆர்பிஎம்-இல் 123 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் ஆனது டுகாட்டி விரைவு மாற்றி எவொ2 பை-டைரக்‌ஷ்னல் மற்றும் ஸ்லிப்-உதவி பெற்ற க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

இந்த என்ஜின் ஆற்றலை அக்ராபோவிக்கின் முழு-ரேசிங் டுகாட்டி செயல்திறன்மிக்க எக்ஸாஸ்ட் குழாயை பொருத்துவதின் மூலமாக 217 பிஎச்பி மற்றும் 130 என்எம் டார்க் திறனாக அதிகரிக்க முடியும். மேலும் இந்த பிரத்யேக எக்ஸாஸ்ட் அமைப்பினால் பைக்கின் எடை 3 கிலோ வரையில் குறையும்.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

டுகாட்டி வி4 பைக்கின் எடை 201 கிலோ மற்றும் வி4எஸ் பைக்கின் எடை 199 கிலோ ஆகும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3 வினாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிடக்கூடிய இந்த டுகாட்டி பைக்குகளின் அதிகப்பட்ச வேகம் 270kmph ஆகும். இந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மாடல்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு 5-இன்ச் டிஎஃப்டி வண்ண திரையினை பெற்றுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

அதிகப்பட்ச செயல்திறனை பெறுவதற்கு இந்த பைக்குகளில் கார்னரிங் ஏபிஎஸ் எவொ, டுகாட்டி ட்ராக்‌ஷ்ன் கண்ட்ரோல் எவொ2, டுகாட்டி வீலிங் கண்ட்ரோல் எவொ, டுகாட்டி ஸ்லைட் கண்ட்ரோல், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் எவொ மற்றும் தானியங்கி டயர் அளவுத்திருத்தம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

இவற்றுடன் பல்வேறு விதமான ரைடிங் மோட்களையும், பவர் மோட்களையும் இந்த பைக்குகளில் பெற முடியும். சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 43மிமீ-இல் முழுவதுமாக அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய யுஎஸ்டி ஷோவா பெரிய பிஸ்டன் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் சாக்ஸ் மோனோ-ஷாக்கும் உள்ளன.

அதேநேரம் வி4எஸ் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய ஹோலின்ஸ் நிக்ஸ்30 யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஹோலின்ஸ் டிடிஎக்ஸ்36 மோனோ-ஷாக் யூனிட்களும் பொருத்தப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு மோட்டார்சைக்கிளிலும் கதிரியக்கமாக பொருத்தப்பட்ட ப்ரெம்போ மோனோப்ளாக் ஸ்டைலிமா எம்4.30 4-பிஸ்டன் காலிபர்களுடன் 330மிமீ-இல் இரட்டை டிஸ்க்குகள் முன் சக்கரத்திலும், 2-பிஸ்டன் காலிபருடன் 245மிமீ-இல் ஒற்றை டிஸ்க் பின்சக்கரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம்

2021 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் 17 இன்ச்சில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களும், வி4எஸ் பைக்கில் 3-ஸ்போக் அலுமினியம் அலாய் சக்கரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இரு மோட்டார்சைக்கிளிலும் அலாய் சக்கரங்களில் பைரெல்லி டியாப்லோ ரோஸ்ஸோ கார்ஸா 2 செயல்திறன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has launched the much-awaited 2021 Streetfighter V4 and V4S in the Indian market. The 2021 Ducati Streetfighter V4 & V4S performance street naked motorcycles are priced at Rs 19.99 lakh and Rs 22.99 lakh, ex-showroom (India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X