டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

டுகாட்டி நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி, அதன் மல்டிஸ்ட்ரடா 950 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகம் அரங்கேறி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு வருடங்கள் ஆக இருக்கின்றநிலையில், அதே பைக்கை தற்போது நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டுகாட்டி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிபி வெள்ளை நிறத்திலான மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக்கை காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதே நிறம் கொண்ட தேர்வையே தற்போது நாட்டில் ரூ. 15.69 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

இந்த விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜிபி வெள்ளை நிறம் மட்டுமின்றி சிவப்பு நிற தேர்விலும் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பைக்கில் 937 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய எல்-ட்வின், லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

இது அதிகபட்சமாக 111 பிஎச்பி பவரை 9,000 ஆர்பிஎம்மிலும், 96 என்எம் டார்க்கை 7,750 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்சிலேயே இப்பைக் இயங்குகின்றது. ஒட்டுமொத்தமாக இப்பைக்கின் எடை 230 கிலோவாகும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் ஓர் உயர் நிலை மாடல் என்பதால் இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், டிக்யூஎஸ், எல்இடி ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், 5இன்சிலான டிஎஃப்டி வண்ண திரை, எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன், ஹேண்ட் ஃப்ரீ சிஸ்டம், பேக்லிட் ஹேண்டில் பார் கன்ட்ரோல் மற்றும் போஷ் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

இத்துடன், நான்கு விதமான ரைடிங் மோட்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் என்ட்யூரோ ஆகிய மோட்களே இதில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, அலாய் அல்லது ஸ்போக் வீல் தேர்வையும் டுகாட்டி இப்பைக்கில் வழங்குகின்றது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற சூப்பர் பைக்குகளான ட்ரையம்ப் டைகர் 900 ஜிடி மற்றும் பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... தயவுசெய்து இதோட விலைய பாத்துடாதீங்க!!

டுகாட்டி நிறுவனம் மிக சமீபத்தில்தான் அதன் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கின் டெலிவரி பணியை இந்தியாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய பைக் அறிமுகத்தால் இந்தியர்களை மேலும் அதகளப்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Launches Multistrada 950 S Bike In India. Read In Tamil.
Story first published: Thursday, May 27, 2021, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X