டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

இரு வேரியண்ட்களில் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி அட்வென்ச்சர் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

வி4 மற்றும் வி4 எஸ் என்பன புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 மோட்டார்சைக்கிளின் இரு வேரியண்ட்களாகும். இவற்றில் ஸ்டாண்டர்ட் வி4 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதான் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கின் இந்திய ஆரம்ப விலையாகும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

வி4 எஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.23.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக் டுகாட்டி சிவப்பு நிறத்தில் கிடைக்கும். அதேநேரம் ஏவியேட்டர் க்ரே நிறத்தில் வி4 எஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23.30 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

புதிய மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ‘வி4 கிராண்டூரிஸ்மோ' என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பில் முக்கிய அம்சமாக டுகாட்டியின் டெஸ்மோட்ரோமிக் வால்வுகளுக்கு பதிலாக சுருள் வால்வு ரீடர்ன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

இந்த மாற்றத்தால், என்ஜினை சர்வீஸ் செய்ய வேண்டிய கால இடைவெளி அதிகரித்துள்ளது. அதாவது முன்பை காட்டிலும் கூடுதல் காலத்திற்கு என்ஜினை சர்வீஸ் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. என்ஜினின் வால்வை பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் 60,000 கிமீ பயணத்திற்கு பிறகே ஏற்படும் என டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

இது மல்டிஸ்ட்ராடா 1260 பைக்கின் சேவை இடைவெளியை காட்டிலும் இரு மடங்காகும். மேலும் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளதாகவும் டுகாட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

பிஎஸ்6-க்கு இணக்கமான வி4 கிராண்டூரீஸ்மோ என்ஜின் அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 170 குதிரை பவரையும், 8,750 ஆர்பிஎம்-இல் 125 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 66.7 கிலோ எடை கொண்டதாக உள்ள இந்த என்ஜின், மல்டிஸ்ட்ராடா 1260 பைக்கில் பொருத்தப்படும் டெஸ்டாஸ்ட்ரெட்டா 2-சிலிண்டர் என்ஜினை காட்டிலும் 1.2 கிலோ எடை குறைவானதாகும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

என்ஜினை மட்டுமே இவ்வளவு விரிவாக பார்ப்பதற்கு காரணம், புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் அதன் வி4 கிராண்டூரிஸ்மோ என்ஜினை ஹைலைட்டாக முன்னுறுத்தியே கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் தொழிற்நுட்ப வசதிகள் மிக்க மோட்டார்சைக்கிளாக நிலைமாற்ற அளவீட்டு அலகுகளையும் (IMU) இந்த டுகாட்டி அட்வென்ச்சர் பைக் பெற்றுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

இந்த அலகுகளில் கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி வீலிங் கண்ட்ரோல், டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல், மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள கார்னரிங் விளக்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றுடன் வி4 எஸ் மாடல் வாகன பிடிப்பு கண்ட்ரோல் மற்றும் தானியங்கி செயல்பாட்டுடன் துணை-ஆக்டிவ் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் கண்ட்ரோல் அமைப்பையும் பெற்று வந்துள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிப்பதற்காக பைக்கின் முன் மற்றும் பின்பக்கத்தில் ரேடார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அலுமினியம் மோனோகாக் ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ள மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கில் முன் சக்கரம் 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4, ரூ.18.99 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!! வி4எஸ் வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்தது

1,567மிமீ நீளத்தில் வீல்பேஸை கொண்டுள்ள புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 220மிமீ ஆகும். வி4 வேரியண்ட்டின் எடை 217 கிலோ, வி4 எஸ் வேரியண்ட்டின் எடை 218 கிலோ ஆகும். இவற்றில் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 22 லிட்டர்களாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati today announced the launch of its much-awaited adventure tourer, the all-new Multistrada V4 and V4 S, priced at INR 18.99 Lacs and INR 23.10 Lacs respectively (Ex-Showroom Pan India). The Multistrada V4 is an all-new motorcycle from the ground up that will headline Ducati's family of adventure Tourer bikes in both capability and technology prowess.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X