புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

Ducati (டுகாட்டி) நிறுவனம் Monster (மான்ஸ்டர்) மற்றும் Monster Plus (மான்ஸ்டர் ப்ளஸ்) பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் ஒரு லட்ச ரூபாய் என்ற முன்தொகையில் தொடங்கியிருக்கின்றது. பைக்குறித்த முக்கிய விபரங்கள் பற்றி விரிவாகக் காணலாம்.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் டுகாட்டி (Ducati), மிக விரைவில் ஓர் புதுமுக பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மான்ஸ்டர் (Monster) மற்றும் மான்ஸ்டர் ப்ளஸ் (Monster Plus) ஆகிய மோட்டார்சைக்கிள்களையே நாட்டில் டுகாட்டி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

இரண்டுமே சூப்பர் பைக்குகளாகும். இவையே விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு தயாரிப்பாளர் புக்கிங் பணிகளை நாட்டில் தொடங்கியிருக்கின்றார். மான்ஸ்டர் அல்லது மான்ஸ்டர் ப்ளஸ் ஆகிய இரண்டிற்குமே புக்கிங் பணிகள் விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக தொடங்கியிருக்கின்றது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

ரூ. 1 லட்சம் என்ற முன்தொகையின் அடிப்படையில் புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் விற்பனைக்கு வரும் சில கார்களுக்கு அதன் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 25 ஆயிரம் தொடங்கி ரூ. 50 ஆயிரம் வரை முன் தொகைக் கட்டணமாக வசூலித்து வரும்நிலையில் ஓர் பைக்கிற்கு ரூ. 1 லட்சம் வரை முன் தொகையாக பெறுவது இந்திய இருசக்கர வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

டுகாட்டி நிறுவனம் இந்த இன்னும் சில நாட்களுக்குள் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. டிஜிட்டல் வாயிலாக பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் மான்ஸ்டர் மற்றும் மான்ஸ்டர் ப்ளஸ் ஆகிய பைக்குகளுக்கான புக்கிங் தொடங்கப்பட்டிருக்கின்றது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி செப்டம்பர் 23ம் தேதி பைக்கின் அறிமுகத்தை செய்ய இருக்கின்றது இதைத்தொடர்ந்து, டெலிவரி பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால் இன்னும் சில நாட்களில் டுகாட்டியின் இப்புதுமுக பைக்குகள் இந்திய சாலைகளில் காண முடியும்.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் 937 சிசி எல்-ட்வின் டெஸ்டஸ்ட்ரெட்டா 11 டிகிரி எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இது 9,250 ஆர்பிஎம்மில் 111 எச்பி மற்றும் 93 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இத்துடன், டுகாட்டி குயிக் ஷிஃப்ட் அப் மற்றும் டவுண் குயிக் ஷிஃப்டர் வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை புதிய தலைமுறையின் மான்ஸ்டர் என நிறுவனம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அழைப்பதற்கு ஏற்ப அதிக திறன் வெளிப்பாட்டை எல்-ட்வின் டெஸ்டஸ்ட்ரெட்டா 11 டிகிரி எஞ்ஜின் வெளியேற்றுகின்றது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

பழைய தலைமுறை மான்ஸ்டரைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாடு மற்றும் குறைவான எடை யுக்தியில் இப்பைக்குகள் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, எக்கசக்க தொழில்நுட்ப வசதிகள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

அந்தவகையில், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் என பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாதுகாப்பான பயணங்களுக்கு இது உகந்த வாகனமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

மேலே பார்த்தவை மட்டுமின்றி லான்ச் கன்ட்ரோல், மூன்று ரைடிங் மோட்கள் (ஸ்போர்ட், அர்பன், டூரிங்) ஆகிய வசதிகளும் மான்ஸ்டர் மற்றும் மான்ஸ்டர் பைக்குகளில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், 4.3 இன்ச் வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கருவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

புக்கிங்கிற்கே 1 லட்ச ரூபாயாம்... அப்படினா பைக்கோட விலை எவ்ளோதாங்க... விலையை கேட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க!

புதிய பைக்கின் விலை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அறிமுகத்தின்போது பைக்கின் விலை பற்றிய தகவல் வெளியாகும். தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பட்ஜெட் ரக கார்களைக் காட்டிலும் அதிக விலை இப்பைக்குகளுக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது 1 லட்ச ரூபாய் என்ற முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati starts booking for monster and monster plus motorcycles in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X