3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

இந்திய நிறுவனம் ஒன்று வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எர்த் எனெர்ஜி இவி புதிதாக மூன்று எலெக்ட்ரிக் டூ-வீலர்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புதுமுக மின்சார வாகனங்கள் பற்றிய டீசர் படங்களை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

டீசர் படங்களின் வாயிலாக கணிசமான தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் மூன்று மின்சார இருசக்கர வாகனங்களில் இரண்டு மோட்டார்சைக்கிள் ரகத்திலும், ஒன்று ஸ்கூட்டர் ரகத்திலும் அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

குடியரசு தினமான வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்றே இந்த புதுமுக மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலயே மக்கள் கவனத்தைக் கவரும் நோக்கில் புதிய டீசர் படங்களை எர்த் எனெர்ஜி இவி வெளியிட்டிருக்கின்றது.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

ரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் புதுமுக மின்சார மோட்டார்சைக்கிள்கள் அமைந்திருக்கின்றன. ஆமாங்க இது அறிமுகம் செய்ய இருக்கும் மின்சார மோட்டார்சைக்கிள்களில் ஒன்று நேக்கட் ஸ்டைலிலும், மற்றொன்று க்ரூஸர் ஸ்டைலிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கிளாசிக் ஸ்டைலில் வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் இருக்கின்றது. ஆனால், இது மின்சார வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனங்களின் வசதி மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜனவரி 26ம் தேதி அன்று அறிமுகத்தின்போது இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

இந்த மூன்று வாகனங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 6 புதிய மின்சார வாகனங்களை இந்த வருடத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக எர்த் எனெர்ஜி இவி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. வர்த்தகம் மற்றும் வர்த்தகம் அல்லா ஆகிய இரு பிரிவுகளிலும் பயன்பாடக் கூடிய வாகனங்களையே அறிமுகம் செய்ய இருப்பதாக அது கூறியிருக்கின்றது.

3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

எர்த் எனர்ஜி இவி நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக இந்நிறுவனம் கிளைட் மற்றும் தி க்ரூஸ் எனும் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் வரிசையிலேயே புதிதாக மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய அது திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Earth Energy EV Reveals Teaser Pic For Its Upcoming Electric Vehicles Ahead Of This Month Launch. Read In Tamil.
Story first published: Saturday, January 23, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X