தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா, ஆம்பியர், ஏத்தர் எனர்ஜி & ரிவோல்ட் மோட்டார்ஸ் போன்ற வேகமாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பில் வளர்ச்சி கண்டுவரும் பிராண்ட்களுடன் புதிய புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து வருகின்றன. இதன் விளைவாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவு வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக சமீபத்தில் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்திருந்தோம்.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இதில் இருந்து இந்திய இருசக்கர வாகன பிரிவை எலக்ட்ரிக் வாகனங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் மிக நீண்ட தொலைவில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த வகையில் விரைவில் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஏர்த் எனர்ஜி நுழைய உள்ளது. இந்த பிராண்டில் இருந்து க்ளைட் எஸ்.எக்ஸ் & க்ளைட் எஸ்.எக்ஸ்+ என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இவற்றிற்கான முன்பதிவுகள் ஏர்த் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ரூ.1,000 என்கிற தொகையுடன் நடைபெற்றுவரும் நிலையில், இவற்றின் டெலிவிகள் 2022 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது ஏர்த் எனர்ஜி நிறுவனம் அதன் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இந்தியாவில் முதற்கட்டமாக 7 மாநிலங்களில் முன்பதிவுகளை துவங்கி இருக்கும் ஏர்த் எனர்ஜி க்ளைட் எஸ்.எக்ஸ் & க்ளைட் எஸ்.எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் இருப்பதிலேயே அதிகப்பட்சமாக நமது தமிழகத்தில் முறையே ரூ.78,000 மற்றும் ரூ.1,00,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறைந்தப்பட்சமாக குஜராத்தில் ரூ.73,000 மற்றும் ரூ.97,000 என கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

மற்ற 5 மாநிலங்களான, கேரளாவில் ரூ.74,000 மற்றும் ரூ.97,000 ஆகவும், கர்நாடகாவில் ரூ.79,999 மற்றும் ரூ.98,175 ஆகவும், ஆந்திரா & தெலுங்கானாவில் ரூ.79,000 மற்றும் ரூ.97,000 ஆகவும், மஹாராஷ்டிராவில் ரூ.74,000 மற்றும் ரூ.95,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்த மாநிலங்களில் டீலர்ஷிப்களையும் ஏர்த் எனர்ஜி நிறுவியுள்ளது.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

மேலும் ஒரிசா, சண்டிஸ்கர் & மத்திய பிரதேசம் உள்ளிட்ட மத்திய இந்திய மாநிலங்களிலும் வரும் ஆண்டுகளில் எலக்ட்ர்க் ஸ்கூட்டர்களின் விற்பனையை துவங்க ஏர்த் எனர்ஜி திட்டமிட்டு வருகிறது. க்ளைட் எஸ்.எக்ஸ் & க்ளைட் எஸ்.எக்ஸ்+ என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் கிட்டத்தட்ட 98% இந்தியாவிலேயே கிடைக்கும் பாகங்களை உருவாக்கப்பட உள்ளதாக இந்த நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

20,000 சதுர அடி பரப்பளவில் மகாராஷ்டிராவில் உள்ள நிறுவனத்தின் க்ரீன்ஃபீல்ட் ஆலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தொழிற்சாலை மேலும் 20,000 சதுர அடி பரப்பளவில், வருடத்திற்கு கிட்டத்தட்ட 46,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவிற்கு விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

முன்னதாக இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில், மும்பையில் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பிற்கான மையத்தினை 7000 சதுர அடி பரப்பில் ஏர்த் எனர்ஜி நிறுவியது. இந்த மையத்தின் மூலமாகவே ஏர்த் எனர்ஜி தனது சொந்த லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புகளை வடிவமைக்க உள்ளது. ஏர்த் எனர்ஜியின் க்ளைட் எஸ்.எக்ஸ் & எஸ்.எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 3.9 கிலோவாட்ஸ் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இது எஸ்.எக்ஸ் மாடலில் அதிகப்பட்சமாக 74 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக பொருத்தப்பட உள்ளது. இதன் உதவியுடன், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம். ஆனால் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25கிமீ மட்டுமே ஆகும்.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இதனால் க்ளைட் எஸ்.எக்ஸ் இ-ஸ்கூட்டரை சாலையில் இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் எதுவும் தேவைப்படாது. ஆனால் இதனை காட்டிலும் கூடுதல் செயல்திறன் & டாப் ஸ்பீடை கொண்டதினால், எஸ்.எக்ஸ்+ இ-ஸ்கூட்டரை இயக்குவதற்கு லைசன்ஸ் தேவைப்படும். மேற்கூறப்பட்ட அதே பேட்டரி தொகுப்புதான் எஸ்.எக்ஸ்+ வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 140 என்எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக கொடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இந்த வேரியண்ட்டை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி கொண்டு 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இதன் டாப் ஸ்பீடு 90kmph ஆகும். இவற்றின் பேட்டரியை விரைவு சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால் 40 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். அதுவே சாதாரண 3-பின் ப்ளக்கின் மூலம் சார்ஜ் ஏற்ற குறைந்தது 2 மணிநேரங்கள் 30 நிமிடங்கள் தேவைப்படுமாம்.

தமிழகத்தில் அதிக விலையில் அறிமுகமாகும் ஏர்த் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! விலைகள் அறிவிப்பு

இதில் க்ளைட் எஸ்.எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள் மற்றும் பேட்டரி சார்ஜ் அளவு, வேகம் & ரேஞ்ச் உள்ளிட்டவற்றை காட்டும் 5-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒவ்வொரு திருப்பலுக்கும் வழிக்காட்டுதல், லைவ் லொக்கேஷன், வாகனத்தை பின் தொடர்தல் மற்றும் திருட்டு பாதுகாப்பு உள்ளிட்டவையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Earth Energy Electric Scooter Glyde SX Roll Out From Jan 2022.
Story first published: Friday, December 17, 2021, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X