இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்! இவ்ளோ ரேஞ்ஜ் தரும்னா யாருதான் வாங்கமாட்டாங்க!!

உள் நாட்டு தயாரிப்பான இ-பைக்-கோ ரக்கட் (eBikeGo Rugged) மின்சார இருசக்கர வாகனத்திற்கு மிக அமோகமான புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மற்றும் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

மின்சார இருசக்கர வாகன இயக்கத்தை மையமாகக் கொண்டு இயங்கும் உள்நாட்டு நிறுவனம் இ-பைக்-கோ (eBikeGo). இந்நிறுவனம், அண்மையில் ரக்கட் (Rugged) எனும் பெயர் கொண்ட மோட்டோ-ஸ்கூட்டர் ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

அறிமுகத்தைத் தொடர்ந்து மின் வாகனத்திற்கான புக்கிங்கையும் நிறுவனம் நாட்டில் தொடங்கியது. இப்பணிகள் தொடங்கி இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் தற்போது ஒரு லட்சத்திற்கு அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங்கை நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

இது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புக்கிங் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ரக்கட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்க கடந்த ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அன்றே தொடங்கப்பட்டது. இன்னும் இந்த மின்சார வாகனத்தின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை. மிக விரைவில் இப்பணிகளையும் நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருக்கின்றது.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

ரக்கட் எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஜி1 (G1) மற்றும் ஜி1-ப்ளஸ் (G1+) எனும் இரு விதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், ஜி1 தேர்விற்கு ரூ. 84,999 என்ற விலையும், ஜி1-ப்ளஸ் தேர்விற்கு ரூ. 99,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்டே ரூ. 99,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இதைக் காட்டிலும் குறைந்த விலை மின்சார இருசக்கர வாகனமாக ரக்கட் காட்சியளிக்கின்றது.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

இந்திய தயாரிப்பு ரக்கட் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் 3kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின்மோட்டார் உச்சபட்சமாக மணிக்கு 70 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. இத்துடன், 2x2 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

ஆனால், இப்பேட்டரி முழுமையாக சார்ஜாக 3.5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதேநேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் இதைவிட மிகக் குறைவான நேரத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். கிராடில் சேஸ் மற்றும் ஸ்டீல் ஃப்ரேம்களால் ரக்கட் எலெக்ட்ரிக் மோட்டோ-ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

ஆகையால், பிற இருசக்கர வாகனங்களை போலவே இது நல்ல உறுதியானதாக இருக்கும். இத்துடன், 30 லிட்டர் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஸ்மார்ட் சென்சார் தயாரிப்புகள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. கூடுதல் சிறப்பு வசதிகளாக ஆன்டி-டைவ் நான்கு முனைகள் கொண்ட அட்ஜெஸ்டபிள் ஷாக் முன் பக்கத்திலும், நான்கு புள்ளிகள் கொண்ட அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பர், 14 இன்சிலான வீல், வட்ட வடிவை முகப்பு மின் விளக்கு, ஒற்றை துண்டு அமைப்பு கொண்ட இருக்கை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

மேலும், செல்போன் செயலி, நேவிகேஷன், வாகனம் இருக்கும் இடத்தை இருந்த இடத்திலேயே கண்டறியும் வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐஓடி (Internet of Things) தொழில்நுட்ப வசதி உள்ளிட்டவையும் ரக்கட் இ-வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டியை முன்னிட்டு ரக்கட் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் சிவப்பு, நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்திய தயாரிப்பிற்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக தூரம் போகும்னா யாருதான் வாங்காம இருப்பா!

ரூ. 499 என்ற மிக மிக குறைவான தொகையில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துடன், நண்பர்கள் அல்லது வேறு நபர்களுக்கு பரிந்துரை செய்யும் வாடிக்கையாளர் ரூ. 1,000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Ebikego rugged received over one lakh bookings with in 2 months
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X