போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில், பஜாஜ் சேத்தக் & டிவிஎஸ் ஐக்யூப் இ-ஸ்கூட்டர்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இப்படிப்பட்ட தற்போதைய நிலையில், கடந்த 2021 நவம்பர் மாதத்தில் இவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால், மற்ற பிரிவு வாகனங்களின் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்படுவதை போல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பும் சில இடையூறுகளை சந்தித்து வருகிறது. இதனாலேயே பஜாஜ் சேத்தக் & டிவிஎஸ் ஐக்யூப் மாடல்களுக்கு இடையேயான விற்பனையில் மாதத்திற்கு மாதம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

கடந்த நவம்பர் மாத விற்பனையை பொறுத்த வரையில், டிவிஎஸ் ஐக்யூப் இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி இந்த 2021ஆம் ஆண்டின் கடந்த 11 மாத மொத்த விற்பனையிலும் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், சேத்தக்கை முந்துகிறது. கடந்த நவம்பரில் மொத்தம் 699 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 511 யூனிட்கள் கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இவை இரண்டின் 2020 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 99 மற்றும் 264 ஆகும். இதில் இருந்து கடந்த 1 வருடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

கடந்த நவம்பர் மாத விற்பனையில் சேத்தக்கை ஐக்யூப் மாடல் முந்தியிருந்தாலும், இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் ஐக்யூப்பை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான சேத்தக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, கடந்த அக்டோபரில் 395 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்க, சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மொத்தம் 835 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

தற்போது வரையில் ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை இந்த 835 யூனிட்களே ஆகும். இதற்கு முன்னர், கடந்த ஜூலை மாதத்தில் 730 சேத்தக் ஸ்கூட்டர்களும், செப்டம்பரில் 642 சேத்தக் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஐக்யூப் மாடலை பொறுத்தவரையில், கடந்த செப்டம்பரில் அதிகப்பட்சமாக 766 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

அதற்கடுத்து அதிகப்பட்ச எண்ணிக்கை கடந்த நவம்பர் மாத 699 யூனிட்களாகும். இந்த வருடத்தில், கடந்த 11 மாதங்களில் மொத்தமாக 4,343 சேத்தக் ஸ்கூட்டர்களும், 4,764 டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், சேத்தக்கை காட்டிலும் 421 யூனிட்கள் அதிகமாக இந்த 2021இல் ஐக்யூப்பை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

இன்னும் இந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்றாலும், இந்த மாதத்தில் ஐக்யூப்பை காட்டிலும் 421 யூனிட்கள் அதிகமாக சேத்தக் விற்பனை செய்யப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இந்த ஆண்டில் சேத்தக்கிற்கு சரியான நேரெதிர் போட்டி மாடலாக ஐக்யூப் விளங்கிறது. இந்த ஆண்டில் சில மாதங்களில் சேத்தக்கின் விற்பனை எண்ணிக்கை 2 இலக்கங்களில், அதாவது 100க்கு கீழ் சென்றுள்ளது.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவலினால், கடந்த மே மாத பூஜ்ஜிய விற்பனை எண்ணிக்கையை தவிர்த்து, இந்த 2021ஆம் ஆண்டில் எந்த மாதத்திலும் டிவிஎஸ் ஐக்ய்ப்பின் விற்பனை எண்ணிக்கை 2 இலக்கங்களுக்கு செல்லவில்லை. இதனால் இந்த 2021ஆம் ஆண்டின் மொத்த விற்பனையில் சேத்தக்கை ஐக்யூப் எளிதாக முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

இந்த ஆண்டில் சேத்தக்கின் சராசரி மாத விற்பனை எண்ணிக்கை 395 யூனிட்கள், ஐக்யூப்பின் சராசரி மாத விற்பனை எண்ணிக்கை 433 யூனிட்களாகும். கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இவை இரண்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு விற்பனையில் சேத்தக்கின் கையே பெரிய அளவில் ஓங்கி இருந்தது. எந்த அளவிற்கு என்றால், ஐக்யூப்பின் மாத விற்பனை எண்ணிக்கை 100ஐ கடந்தாலே பெரிய விஷயம் என்பதுபோல்தான் பார்க்கப்பட்டது.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

இதற்கு முக்கிய காரணம் விலை. அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் சேத்தக்கின் விலை டிவிஎஸ் ஐக்யூப்பை காட்டிலும் பெரிய அளவில் குறைவாக இருந்தது. சில நகரங்களில் ஐக்யூப்பின் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.1.50 லட்சம் வரையில் கூட இருந்தன. ஆனால் அதன்பின் ஐக்யூப்பின் விலை கணிசமாக குறைக்கப்பட்டது, அதேபோல் சேத்தக்கின் விலையினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.

போட்டி போட்டு விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்& டிவிஎஸ் ஐக்யூப்- நவம்பர் மாத சேல்ஸில் முதலிடம் எது தெரியுமா?

இதனால் தற்போது இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலையில் நேரெதிராக விளங்குகின்றன. சேத்தக் தற்சமயம் புனே, பெங்களூர், சென்னை, மங்களூர், மைசூர், ஹைதராபாத், நாக்பூர், அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப்பை சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
English summary
Electric scooter sales nov 2021 chetak vs iqube
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X