150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

பெட்ரோல் பைக்குகளை விட எலெக்ட்ரிக் டூவீலர்கள் ஏன் சிறந்தவை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

இந்தியா தற்போது மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் டூவீலர்களை ஏற்று கொள்ள தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் டூவீலர்களை நாம் நிச்சயமாக சாலையில் மிக அதிகளவில் காண முடியும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/எலெக்ட்ரிக் பைக்குகள் என ஏராளமான எலெக்ட்ரிக் டூவீலர்கள் சாலைக்கு வந்து கொண்டுள்ளன.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

எலெக்ட்ரிக் டூவீலர்கள் மிகவும் பயனுள்ளவை என்பதை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். குறிப்பாக நகர பயன்பாட்டிற்கு நிறைய பேர் எலெக்ட்ரிக் டூவீலர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். எலெக்ட்ரிக் டூவீலர்கள் எந்தெந்த வகைகளில் பயன் உள்ளவையாக இருக்கும்? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

கவர்ச்சிகரமான விலை

பெரும்பாலான எலெக்ட்ரிக் டூவீலர்கள், 150-250 சிசி பெட்ரோல் பைக்குகள் உடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இதனுடன் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு விலக்கும் கிடைக்கிறது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் போன்ற சலுகைகளும் வேறு வழங்கப்படுகின்றன.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

50 ஆயிரம்-60 ஆயிரம் என்ற குறைவான விலையிலேயே உங்களால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முடியும். அதே நேரத்தில் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 1 லட்ச ரூபாய் முதல் 1.5 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

குறைவான பராமரிப்பு செலவு

எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்குவதற்கு குறைவாகன பாகங்களே பயன்படுத்தப்படுகின்றன. பேட்டரி மற்றும் மோட்டார் போன்ற குறைவான பாகங்களிலேயே அவை இயங்கி விடும். எனவே பெட்ரோல் பைக்குகள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இன்ஜின் ஆயிலை மாற்றுவது போன்ற செலவுகள் எலெக்ட்ரிக் டூவீலர்களில் இருக்காது. இதன் மூலம் உங்கள் பணம் மிச்சமாகும். அத்துடன் எலெக்ட்ரிக் டூவீலர்களில் பராமரிப்பு தொடர்பான பிரச்னைகள் பெரிதாக ஏற்படாது என்பதால், நீங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதையும் தவிர்க்க முடியும்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

இயக்குவதற்கான செலவும் குறைவு

இந்தியாவில் எரிபொருள் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எலெக்ட்ரிக் டூவீலர்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். ஏனெனில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகும். அவற்றுக்கு எரிபொருள் தேவைப்படாது என்பதே இதற்கு காரணம்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

இந்திய மக்கள் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு அதிகளவில் மாறி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமே பெட்ரோல் விலைதான். இதே காரணத்திற்காக பலர் எலெக்ட்ரிக் கார்களையும் வாங்கி வருகின்றனர். இந்தியாவில் தற்போது பல்வேறு எலெக்ட்ரிக் கார்களும் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டுள்ளன.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

ஓட்டுவது எளிது

எலெக்ட்ரிக் டூவீலர்களின் மற்றொரு முக்கியமான ப்ளஸ் பாயிண்ட் என்விஹெச் லெவல்கள் (NVH Levels - Noise, Vibrations And Harshness). எலெக்ட்ரிக் டூவீலர்கள் சப்தம் எழுப்பாது. அத்துடன் அதிர்வுகளும் இருக்காது. எனவே எலெக்ட்ரிக் டூவீலர்களை ஓட்டுவது என்பது உங்களுக்கு நிச்சயம் மென்மையான அனுபவத்தை வழங்கும்.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

எலெக்ட்ரிக் டூவீலர்களின் இந்த பண்புகள், நகர பகுதிகளில் அவற்றை ஓட்டுவதை எளிமையாக்குகின்றன. அத்துடன் உங்களுக்கு சௌகரியமான பயணத்தையும் வழங்குகின்றன. ஒட்டுமொத்தத்தில் பெட்ரோல் பைக்குகளையே ஓட்டி பழகியவர்களுக்கு, எலெக்ட்ரிக் டூவீலர்கள் நிச்சயமாக மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

150 சிசி பைக்கை விட எலெக்ட்ரிக் டூவீலர்தான் ரொம்ப பெஸ்ட்... இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!

எனினும் இந்தியாவில் இன்னும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் அமைக்கப்படவில்லை. எனவே தற்போதைய நிலையில் தொலை தூர பயணங்களுக்கு அவை ஏற்றதாக இருக்குமா? என்பது சந்தேகமே. வாடிக்கையாளர்கள் மத்தியில் ரேஞ்ச் பற்றிய கவலை இன்னமும் இருந்து கொண்டுதான் உள்ளது. எனினும் வருங்காலத்தில் இந்த பிரச்னையும் கண்டிப்பாக நிவர்த்தியாகும் என உறுதியாக நம்பலாம்.

Most Read Articles
English summary
Electric two wheelers vs petrol bikes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X