24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபெலிடே எலெக்ட்ரிக் அட்டகாசமான வசதிகள் கொண்ட இ-சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஃபெலிடே எலெக்ட்ரிக். இது ஓர் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் ஓர் அதி நவீன இ-பைக்கை (மின்சார திறன் கொண்ட மிதிவண்டியை) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

ஃபெலிடே மேவென் என பெயரிடப்பட்டிருக்கும் இ-சைக்கிளுக்கு ரூ. 24,500 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் சைக்கிள்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இதன் உச்ச வேகம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கின்றது.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

ஆமாங்க, ஃபெலிடே மேவென் இ-சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த உச்சபட்ச வேகத்தை 250W பிஎல்டிசி மின் மோட்டாரே வெளிப்படுத்துகின்றது. இது அதிகபட்சமாக 32 என்எமம் வரை வெளியேற்றும். மேலும், இந்த மின் மோட்டாரில் லெக் அசிஸ்ட் மற்றும் ஐந்து விதமான இயக்க நிலைகள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

மின் மோட்டார் வசதி இதில் இடம்பெற்றிருந்தாலும் பெடல் (மிதிக்கும்) வசதியையும் ஃபெலிடே எலெக்ட்ரிக் மேவென் இ-சைக்கிளில் வழங்கியிருக்கின்றது. ஆகையால், சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலையே வேண்டாம். அப்படியே தீர்ந்தாலும் பெடல் செய்து இலக்கிற்கு செல்லலாம்.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

இ-சைக்கிள் 35 கிமீ முதல் 50 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறனில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த ரேஞ்ஜ் திறன் முழுமையாக முடிவடைந்த பின்னர் 3.5 மணி நேரங்கள் வரை செலவு செய்து பேட்டரி நாம் சார்ஜ் செய்ய வேண்டும். ஆமாங்க, மேவென் இ-சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் தேவைப்படும்.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

இதன் வீல்கள் அனைத்தும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது 27.5 இன்சிலானது. இதிலேயே அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கக் கூடிய டயர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இரு வீல்களிலும் சிறந்த பிரேக்கிங் வசதிக்காக டிஸ்க்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

இவையே உடனடியான பிரேக்கிங்கிற்கு உதவியாக இருக்கும். தொடர்ந்து, சைக்கிளின் முன் பகுதியில் சஸ்பென்ஷன் வழங்கபட்டுள்ளது. ஆனால், பின் பக்கத்தில் சஸ்பெஷன் வழங்கப்படவில்லை. மேலும், எல்இடி இன்டிகேட்டர் மின் விளக்குகள், பேட்டரி அளவு மற்றும் பெடல் அசிஸ்ட் போன்ற முக்கிய தகவல்களை வழங்குவதற்கான சிறிய திரை உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

இது பல்வேறு சிறப்பு வசதிகளை தாங்கிய வண்ணம் ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடை 21கிலோ ஆகும். இதற்கு 2 வருடங்கள் மோட்டார் வாரண்டியையும், இதர மின்சார பாகங்களுக்கு 1 வருட வாரண்டியையும் ஃபெலிடே எலெக்ட்ரிக் அறிவித்துள்ளது.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது கணிசமாக உயர்ந்திருப்பதை நம்மால் காணப்படுகின்றது. உலக நாடுகள் அனைத்திலும் இதே நிலை தென்படுவதை ஆட்டோத்துறை சார்ந்து வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

குறைந்த விலை, அதிக பிரீமியம் மற்றும் சிறப்பு வசதிகளுடன் மின் வாகனங்கள் விற்பனைக்கு வருவதே இதற்கு காரணம். குறிப்பாக, முன்பைக் காட்டிலும் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது உயர்ந்து வருவதும் மின் வாகனங்களின் மக்கள் சாய்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

24,500 ரூபாவுக்கு ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் அறிமுகம்... அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கு!!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஃபெலிடே மேவென் இ-சைக்கிள் இந்தியாவில் ரூ. 24,500 என்ற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது மின்சார வாகன ஆர்வலர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Felidae Maven Pedal-Assist e-Bike Launched In India At Rs. 24,500. Read In Tamil.
Story first published: Saturday, May 8, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X