Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இளம் தலையினரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் Honda CB200X சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் மற்றுமொரு அட்வென்ச்சர் பைக்காக, Honda Motorcycle நிறுவனத்தின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக இது கொண்டுவரப்பட்டுள்ளது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாக தயாரிப்பு நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற CB200X தோற்றத்தாலும், இரட்டை பயன்பாட்டு டயர்களினாலும் பக்கா அட்வென்ச்சர் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இருப்பினும் Hero XPulse 200 போன்று ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு 100 சதவீதம் ஏற்ற அட்வென்ச்சர் பைக் மாடலாக Honda 200X-ஐ கூற முடியாது. இருப்பினும் இந்தியாவில் சில அட்வென்ச்சர் பைக்குகள் மட்டுமே விற்பனையில் உள்ளதால், இந்த புதிய Honda அட்வென்ச்சர் பைக்கிற்கும் Hero XPulse 200 பைக்கிற்கும் இடையே போட்டி இருக்கும்.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இவை இரண்டில் எதை வாங்குவது என்பதில் உங்களில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம். இதை தீர்க்கும் விதமாகவே இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளை பற்றி விரிவாக பார்க்கவுள்ளோம். புதிய Honda CB200X பைக் ரூ.1.44 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் Hero XPulse 200 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.20 லட்சமாக உள்ளது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த எண்ட்ரீ-லெவல் ஜப்பானிய அட்வென்ச்சர் பைக்கை காட்டிலும் நம்மூர் Hero XPulse பைக் ரூ.24,000 மலிவானதாக உள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வளவு குறைவான விலையில் CB200X-ஐ காட்டிலும் சிறந்த ஆஃப்-ரோடு திறன்களை கொண்ட பைக்கை வாங்கலாம்.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!
Dimensions Honda CB200X Hero Xpulse 200
Length 2035mm 2222mm
Width 843mm 850mm
Height 1248mm 1258mm
Wheelbase 1355mm 1410mm
Ground Clearance 167mm 220mm
Seat Height 810mm 823mm
Kerb Weight 147kg 157kg
Fuel Tank 12-litres 13-litres

பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், Hero XPulse 200 நீளம், அகலம், உயரம், வீல்பேஸ், க்ரவுண்ட் க்ளியரென்ஸ், தரையில் இருந்து இருக்கையின் உயரம், கெர்ப் எடை மற்றும் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை அனைத்திலும் Honda-வின் புதிய அட்வென்ச்சர் பைக் சிறியதாக உள்ளது. இதனால் இவை இரண்டையும் ஒன்றாக நிற்க வைத்து பார்த்தால் Hero XPulse 200 சற்று பருத்த வடிவில் காட்சியளிக்கும்.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இருப்பினும் இரண்டும் ஒரே மாதிரியாக 200சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களாகவே விற்பனை செய்யப்படுகின்றன. Hero XPulse 200 பைக்கில் பொருத்தப்படுகின்ற 199.6சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 17.8 பிஎச்பி-ஐயும், 6,500 ஆர்பிஎம்-இல் 16.45 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மறுபக்கம் புதிய Honda CB200X பைக்கில் 184.4சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இதே என்ஜின் தான் Honda Hornet 2.0 பைக்கிலும் வழங்கப்படுகிறது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

ஆனால் CB200X பைக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 17 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படுகிறது. என்ஜின் மட்டுமின்றி Hornet 2.0 பைக்கின் அதே டைமண்ட் வகையை சார்ந்த சேசிஸில் தான் CB200X வடிவமைக்கப்பட்டுள்ளது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

அதுவே, XPulse 200 பைக்கானது Tubular Diamond frame-இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. Honda அட்வென்ச்சர் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு தலைக்கீழான ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

XPulse பைக்கில் 190மிமீ டிராவல் உடன் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 10 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் சஸ்பென்ஷன் அமைப்பாக வழங்கப்படுகின்றன. புதிய Honda CB200X பைக்கில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இவற்றில் 100/70 மற்றும் 140/70 பிரிவு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மறுபக்கம் XPulse 200 பைக்கில் அதன் பரிமாண அளவுகளுக்கு ஏற்ப முன்பக்கத்தில் 21 இன்ச்சில் ஸ்போக்டு சக்கரம், 90/90 பிரிவு டயருடனும், பின்பக்கத்தில் 18 இன்ச்சில் சக்கரம், 120/80 பிரிவு டயருடனும் வழங்கப்படுகின்றன.

Honda CB200X Vs Hero XPulse 200: அட்வென்ச்சர் பைக்காக எது பெஸ்ட்? விரிவான விபரங்கள் இங்கே!!

இவை இரண்டிலும் டிஸ்க் ப்ரேக்குகளே இருபக்க சக்கரங்களிலும் பொருத்தப்படுகின்றன. அதேபோல் இவை இரண்டிலும் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. சந்தையில் முன்னணி நிறுவனங்களாக உள்ள Hero மற்றும் Honda இரண்டின் அட்வென்ச்சர் பைக்குகளை பற்றியும் ஓரளவிற்கு விரிவாக கூறிவிட்டோம். இனி பிடித்ததை தேர்வு செய்வது தான் உங்கள் வேலை.

Most Read Articles
English summary
Honda CB200X Vs Hero XPluse 200 ADV, Specs Comparison.
Story first published: Sunday, August 22, 2021, 23:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X