தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் அதன் மிக பெரிய தொழிற்சாலையை நமது தமிழகத்தில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட் நிறுவனத்தின் இ-மொபைலிட்டி பிரிவாக விளங்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி, எலக்ட்ரிக் 2-சக்கர மற்றும் எலக்ட்ரிக் 3-சக்கர வாகன விற்பனையில் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இத்தகைய நிறுவனம் தான் தற்போது தமிழகத்தில் ராணிப்பேட்டையில் புதியதாக தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

கிட்டத்தட்ட 35 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தின் தொழில் மைய பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் இருந்து உள்நாட்டு விற்பனைக்காக மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதிகளையும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுமார் ரூ.700 கோடி முதலீட்டில், இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது பங்கினை விரிவுப்படுத்தும் வகையில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் இந்த தொழிற்சாலையை கட்டமைத்துள்ளது.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

ஒன்றிய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா மற்றும் அட்மனிர்பார் பாரத் போன்ற தயாரிப்பு திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளின் விளைவாக உருவாகியுள்ள இந்த புதிய தொழிற்சாலை ஆனது எலக்ட்ரிக் இயக்க பிரிவில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் மேலும் வளர்ச்சியை காண பெரும் உதவியாக இருக்கும்.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

புதிய ராணிபேட் தொழிற்சாலையில் நடப்பு 2021-22 நிதியாண்டு முடிவதற்குள் 1.2 லட்ச யூனிட் எலக்ட்டிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க க்ரீவ்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் 1 மில்லியன் வரையில் தயாரிக்கும் அளவிற்கு இந்த தொழிற்சாலையின் திறன் கொண்டுவரப்பட்டுள்ளது. உண்மையில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் நீண்ட நாள் கனவான இந்த தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 70% பெண்களே பணியாற்றவுள்ளனர்.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

இந்த புதிய தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பேசுகையில், எலக்ட்ர்க் மொபைலிட்டி வேகம் எடுத்து வருகிறது. இங்கு ஆட்டோமொபைல் துறைக்கு சாத்தியமான ஒவ்வொரு ஆதரவையும் வழங்க நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி போன்ற பல தொழிற்சாலைகள் சமூகத்தை மேம்படுத்தும்.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

மேலும் ஆலையில் பெரும்பான்மையான பெண் தொழிலாளர்களை இந்த நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது என்பதை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமானதாக உள்ளது. இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற நமது பெண் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், வேலைகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறினார்.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

பிறகு க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான நாகேஷ் ஏ பாசாவஹளி பேசுகையில், நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு மலிவான மற்றும் நம்பகமான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இது ஒரு கிரகத்திற்கான கடைசி மைல் போக்குவரத்தை கார்பன் இல்லாததாக மாற்றும் எங்கள் நோக்கத்துடன் ஒத்து போகிறது.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

இந்த இவி மெகாசைட், கடைசி மைல் மொபைலிட்டி சந்தையில் எதிர்காலத்தில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் இவி-களை உற்பத்தி செய்யும் வகையில் எங்கள் திறனை விரிவுப்படுத்துவதால், விவேகமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களின் அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்திய செய்ய முடியும். மிகவும் திறமையான பணியாளர்களை வளர்ப்பதற்கும், எங்கள் பணியாளர்களில் 70% உள்ள பெண்கள் உட்பட உள்ளூர் சமூகத்திற்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் எங்களை அனுமதிக்கிறது என்றார்.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

#MovingBillionsWithGreaves என்ற க்ரீவ்ஸ் எலக்ட்ரிக்கின் லட்சிய இலக்கு, நாட்டில் இவி பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. வனிகம்- வாடிக்கையாளர் மற்றும் வணிகம்- வணிகம் என க்ரீவ்ஸ் எலக்ட்ரிக்கின் இரு விதமான வணிகங்களானது மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியான கடைசி மைல் இயக்கத்துடன் முழு சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் இணக்கமானதாக செயல்படுகின்றன.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி ஆனது 7 ஆயிரத்திற்கும் அதிகமான தொடு மையங்கள், 12,000 உதவி மெக்கானிக்குகள் மற்றும் பிரத்யேக ஆன்-கால் ஆதரவு குழு ஆகியவற்றை கொண்ட வலுவான சில்லறை மற்றும் விற்பனைக்கு பிந்தைய நெட்வொர்க்கை கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே 7,500க்கும் அதிகமான யூனிட் எலக்ட்ரிக் வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

தொழிற்சாலைகள் பெருகுது!! ராணிபேட்டையில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி!

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி என சொல்வதை காட்டிலும் ஆம்பியர் வாகன பிரைவேட் லிமிடெட் என கூறினால் தான் பலருக்கு தெரியும் என நினைக்கிறேன். எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைப்பதிலும், தயாரிப்பதிலும் மற்றும் அவற்றிற்கான இவி தொழிற்நுட்பத்தை கண்டறிவதிலும் சுமார் 13 வருட அனுபவத்தை க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளது. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டிகு இதுவரையில் மட்டுமே 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.

Most Read Articles
English summary
Greaves Electric Mobility opens its largest EV production facility in Ranipet, Tamil Nadu
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X