கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

சீன நிறுவனம் ஒன்று கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் அடிப்படை உருவத்தில் ஓர் புதிய பைக்கை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் சில, புத்தங்களை நகல் எடுப்பதுபோல உலக அரங்கிள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் வாகனங்களை நகல் எடுத்து உற்பத்தி செய்து வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதற்கு முன்பாக பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் படம்

சமீபத்தில்கூட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை சீன நிறுவனம் ஒன்று நகல் எடுத்து உருவாக்கியிருந்தது. இதனை இந்தியர்கள் பலர் இணையத்தில் 'சிமாலயன்' குறிப்பிட்டு வந்தனர். இந்த நிலையிலேயே மீண்டுமொரு நகலெடுப்பு சம்பவத்தை சீன நிறுவனம் அரங்கேறியிருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

கேடிஎம் 125 ட்யூக் படம்

சீனாவின் புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹன்வே மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் ஆகும். அது கேடிஎம் நிறுவனத்தின் 125 ட்யூக் அடிப்படையிலான பைக்கையே தற்போது உருவாக்கியிருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

கேடிஎம் 125 ட்யூக் படம்

புதிய நகலுக்கு என்கே 125 ப்யூரியஸ் என்ற பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது. ஐரோப்பிய இருசக்கர வாகன சந்தைக்காக இப்பைக்கை ஹன்வே நிறுவனம் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் 125 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

கேடிஎம் 125 ட்யூக் படம்

கேடிஎம் ட்யூக் 125 அடிப்படை உருவ தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஹன்வே என்கே125 பைக்கின் முகப்பு மின் விளக்கானது பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் இடம்பெற்றிருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. இதில், எல்இடி தர மின் விளக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

தொடர்ந்து, 390 ட்யூக் பைக்கில் இடம்பெற்றிருப்பதைப் போல பெரிய வண்ண டிஎஃப்டி திரை பொருத்தப்பட்டிருக்கின்றது. இது பல்வேறு தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளிச்சம் மற்றும் இருட்டு ஆகிய இரு விதமான மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

இத்துடன் ப்ளூடூத் இணைப்பு வசதியும் ஹன்வே என்கே 125 பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த யூரோ 5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10 ஆயிரம் ஆர்பிஎம்மில் 15 பிஎஸ் வரையிலான திறனை வெளிப்படுத்தும்.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

ஆனால், கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜினானது 14.95 பிஎஸ் திறனை மட்டுமே வெளிப்படுத்தும். ஆகையால், ஹன்வே என்கே 125 ட்யூக் 125ஐக் காட்டிலும் சற்று கூடுதல் திறனை வெளிப்படுத்தும் இருசக்கர வாகனமாக உருவாகியிருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

தொடர்ந்து, சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்கா ஹன்வே என்கே 125 ப்யூரியஸ் பைக்கில் யுஎஸ்டி ஃபோர்ட் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 280 மிமீ அளவுள்ள டிஸ்க் முன்பக்கத்திலும், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பின் பக்க வீலிலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

இத்துடன், இரு வீல்களுக்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே ஹன்வே என்கே 125 ப்யூரியஸ் பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக் ஐரோப்பிய சந்தையில் 3,399 யூரோக்களுக்கு விற்கப்பட இருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.2.52 லட்சம் (தோராய மதிப்பு) ஆகும். இதே சன்தையில் கேடிஎம் 125 பைக் 5,350 யூரோக்களுக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 3.97 லட்சம் ஆகும். இதனைக் காட்டிலும் 1.48 லட்ச ரூபாய் குறைவான விலையில் சீனாவின் ஹன்வே என்கே125 ஐரோப்பிய இருசக்கர வாகன சந்தையில் களமிறங்கியிருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்தின் அடி மடியில் கை வைத்த சீன நிறுவனம்! இந்த பைக்கையும் டூப்ளிகேட் செஞ்சிட்டாங்க!

இது கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு பெரும் சவாலை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், ஐரோப்பியர்களிடையே ஹன்வே என்கே 125 நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Hanway Motorcycle Launches KTM 125 Duke Replica NK 125 Furious In Europe. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X