எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

எலெக்ட்ரிக் பைக் மாடல்களை புதிய பிராண்டில் விற்பனைக்கு களமிறக்க ஹார்லி டேவிட்சன் முடிவு செய்துள்ளது. மேலும், புதிய பிராண்டில் வர இருக்கும் முதல் பைக் மாடலை வெளியிடுவதற்கான தேதியையும் அறிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரம்மாண்டமான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கூட்டணியில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இந்த நிலையில், எதிர்கால வர்த்தகத்திற்கு தக்கவாறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

தனது எலெக்ட்ரிக் பைக் மாடல்களை லைவ்வயர் என்ற புதிய பிராண்டில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பிராண்டில் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை வரும் ஜூலை 8ந் தேதி வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

கடந்த 2018ம் ஆண்டு லைவ்வயர் என்ற பெயரில் எலெக்ட்ரிக் பைக் மாடலை ஹார்லி டேவிட்சன் விற்பனைக்கு கொண்டு வந்தது. எனினும், தற்போது லைவ்வயர் என்ற பெயரை தனி பிராண்டாக மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த பிராண்டில்தான் அனைத்து எலெக்ட்ரிக் பைக் மாடல்களையும் களமிறக்க உள்ளது.

எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

மேலும், லைவ்வயர் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்காக தனி ஷோரூம்களை அமைக்கவும் ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது. முதலாவது ஷோரூம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் அமைக்கப்பட உள்ளது.

எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் லைவ் வயர் பிராண்டில் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்குகளை புதிய பிராண்டில் கொண்டு வரும் ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் மட்டுமின்றி, ஏற்கனவே மின்சார சைக்கிள்களையும் அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். இந்த மாடல்கள் 5,000 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
Harley-Davidson is all set to reveal new electric motorcycle in dedicated brand very soon.
Story first published: Tuesday, May 11, 2021, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X