ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 என்கிற பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்று உலகளவில் வெளிவர தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள இந்த புதிய மோட்டார்சைக்கிள், 1250 ரெவால்யுஷன் மேக்ஸ் என்ஜினை பெற்றுவரவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

இந்த 1250சிசி என்ஜின் ஏற்கனவே ஹார்லி-டேவிட்சனின் பான் அமெரிக்கா 1250 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹார்லி-டேவிட்சனின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது இந்த புதிய மோட்டார்சைக்கிள் உலகளவில் வருகிற ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

அதன் பிறகே நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தைக்கு இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக் கொண்டுவரப்படும். பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் சமீபத்தில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

இதனால் தான் புதிய கஸ்டம் 1250 பைக்கும் இந்திய சந்தைக்கும் வரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் கடந்த ஆண்டில் தொழிற்சாலையை மூடிய இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து தனது வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

கஸ்டம் 1250 பைக்கின் அறிமுகம் குறித்து ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் சிஇஓ ஜோச்சன் ஜீட்ஸ் கருத்து தெரிவிக்கையில், எங்களது முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பான் அமெரிக்காவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் பிரிவில் ரெவால்யுஷன் மேக்ஸ் இயக்குத்தளத்தில் கட்டமைக்கப்பட்ட மற்றொரு புதிய மோட்டார்சைக்கிளை வெளிப்படுத்த நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

இந்த பைக் ஒப்பிட முடியாத ஹார்லி-டேவிட்சனின் தொழிற்நுட்பம், செயல்திறன் மற்றும் பாணியின் வெளிப்பாடாக இருக்கும் என கூறியுள்ளார். ஹார்லி-டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளான பான் அமெரிக்கா இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் களமிறக்கப்பட்டு வருகிறது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

பரிணாமத்தில் இருந்து புரட்சி வரை என்ற வாக்கியங்களுடன் தற்போது இதன் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் புதிய கஸ்டம் 1250 பைக் பான் அமெரிக்காவின் அதே ரெவால்யுஷன் மேக்ஸ் என்ஜினின் அடிப்படையில் தான் உருவாக்கப்படும் என யூகிக்கிறோம். மற்றப்படி இந்த ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்த புதிய பைக் தயாரிக்கப்படுகிறது என ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

ஹார்லி-டேவிட்சனின் புதிய கஸ்டம் 1250 பைக்!! பான் அமெரிக்காவை தொடர்ந்து அறிமுகமாகிறது!

கஸ்டம் 1250 பைக்கின் கான்செப்ட் மாடலை 2018ல் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் முதன்முதலாக காட்சிப்படுத்தியது. பலத்த பில்டப் உடன் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வெளிவரவுள்ளது என்றாலும், தோற்றத்தில் மற்ற பழமையான ஹார்லி-டேவிட்சன் பைக்குகளையே இது ஒத்து காணப்படும்.

Most Read Articles
English summary
Harley-Davidson Custom 1250 To Be Introduced Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X