ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கான சிறப்பு சலுகைகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

சமீபத்தில் இந்தியாவில் நேரடி வணிகத்தை நிறுத்தி கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி-டேவிட்சன் அதிரடி முடிவொன்றை எடுத்திருந்தது. இந்த முடிவின்படி இந்தியாவில் இருந்த இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட்டது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

அதன்பின் இந்தியாவில் பைக்குகளின் விற்பனை மற்றும் சேவைகளை முன்னணி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து வழங்கவுள்ளதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளிவந்தது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

இதனால் தற்சமயம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை நம் நாட்டில் விற்பதையும், அவற்றிற்கான சேவைகளை வழங்குவதையும் ஹீரோ நிறுவனம் தான் கவனித்து கொண்டுவருகிறது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

இந்த நிலையில் தற்போது ‘ஃபர்ஸ்ட் டு ரைட்'- First to Ride என்ற செயல்முறை திட்டத்தின்படி மிக பெரிய அளவிலான சலுகைகளை சில குறிப்பிட்ட ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

இந்த சலுகைகள் அனைவருக்குமானது கிடையாது. ஹீரோ மோட்டோகார்பின் வர்த்தக கூட்டணி நிறுவனங்களுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் மட்டுமே ஆகும். இந்த சலுகை அறிவிப்பில் ஃபேட் பாய் 114, ஃபேட் பாய் 107, லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் உள்ளிட்ட ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் அடங்குகின்றன.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

இதில் ஃபேட் பாய் 114 பைக்கிற்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலும், ஃபேட் பாய் 107 பைக்கிற்கு ரூ.2 லட்சம் மதிப்பிலும், லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் பைக்குகளுக்கு முறையே ரூ.1.25 லட்சம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

மேலும், இவற்றின் முதல் 200 யூனிட்கள் மட்டுமே சலுகை விலையில் விற்கப்படும் எனவும் ஹீரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற பைக்குகளில் இருந்து தனித்து தெரிவதற்காக இந்த சலுகையின் கீழ் விற்கப்படும் அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் சேர்மனின் கையொப்பம் வழங்கப்படுமாம்.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

இந்திய சந்தையில் தற்சமயம் 9 ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் இந்த சலுகையில் அடங்கும் ஃபேட் பாய் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.18.25 லட்சமாக உள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது ஹீரோ!! ஆனால் அங்க தான் ஒரு டுவிஸ்ட்..

லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் பைக்குகளின் விலைகள் ரூ.13.75 லட்சம் மற்றும் ரூ.14.69 லட்சமாக உள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் என்று பார்த்தால், ஸ்ட்ரீட் 750 ஆகும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.69 லட்சம்.

Most Read Articles

English summary
Harley-Davidson bikes gets huge Offer 2021. Read in Tamil.
Story first published: Wednesday, March 31, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X