பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் மை2020 மாடல்களுக்கு இந்தியாவில் அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

முன்னணி அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி-டேவிட்சன் தற்போது அறிவித்துள்ள கவர்ச்சிகரமான சலுகைகளில் ஃபேட் பாய் 107, ஃபேட் பாய் 114, லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் என்ற நான்கு மாடல்கள் மட்டுமே அடங்குகின்றன.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

இந்த சலுகையின்படி ஃபேட் பாய் 107 பைக்கிற்கு பிரத்யேக விலையாக ரூ.14.49 லட்சமும், ஃபேட் பாய் 114 (மை2020) பைக்கிற்கு சலுகைகள் போக ரூ.19.09 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் பைக்குகளுக்கு ரூ.11.25 லட்சம் மற்றும் ரூ.11.75 லட்சங்கள் தள்ளுபடி விலைகளாக கொண்டுவரப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்டுள்ள இந்த விலைகள் அனைத்தும் டெல்லி என்சிஆர், எக்ஸ்ஷோரூம் விலைகளாகும்.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

இவற்றில் கடந்த 2020ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு ஸ்டாக்கில் உள்ள மாதிரிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த புதிய சலுகையினை பெற முடியும். இதனால் ஹார்லி-டேவிட்சன் பைக்கை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், உடனே முந்துவது தான் சிறந்தது.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

இந்த சலுகைகள் இந்தியாவில் நகரத்திற்கு நகரம் வேறுப்படலாம். இதனால் உங்களது நகரத்தில் இந்த சலுகை எந்த அளவில் உள்ளது என்பதை அறிய அருகில் உள்ள டீலர்ஷிப் மையங்களை தொடர்பு கொள்ளவும்.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

ஏனெனில் இந்திய சந்தையில் இந்த சலுகையில் அடங்குகின்ற நான்கு பைக்குகளில் ஃபேட் பாய் 107, லே ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் என்ற மூன்றின் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த மூன்று பைக்குகளின் சில மாதிரிகள் ஒரு சில டீலர்ஷிப்களில் விற்பனையில் இருக்கலாம்.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

அவற்றை விற்று தீர்க்கவே ஹார்லி-டேவிட்சன் இவ்வாறான சலுகையினை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தொழிற்சாலையை கடந்த ஆண்டில் மூடியது. இதனால் இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் அதன் டீலர்ஷிப் மையங்களில் விற்பனை செய்து வருகிறது.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

இதனால் இந்த சலுகை தொடர்பான எதாவது சந்தேகம் இருப்பினும் அருகில் உள்ள ஹீரோ டீலர்ஷிப் மையத்தினை தான் தொடர்பு கொள்ள வேண்டும். தொழிற்சாலையை மூடினாலும், ஏகப்பட்ட ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் நம் நாட்டு சந்தையில் விற்பனையில் உள்ளன, அவை அனைத்தும் பிஎஸ்6-க்கு இணக்கமானவை ஆகும்.

பைக்குகளின் விலைகளை குறைத்தது ஹார்லி-டேவிட்சன்!! கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரம்!

இது ஒருபுறம் இருக்க, லைவ் வயர் என்ற புதிய பிராண்டை உலகளவில் அறிமுகப்படுத்த ஹார்லி-டேவிட்சன் தயாராகி வருகிறது. வருகிற ஜீலையில் உலகளவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய பிராண்ட் இந்திய சந்தைக்கும் வர வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Harley Davidson Announced Big Discounts On MY2020 Models In India
Story first published: Wednesday, May 12, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X