ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புத்தம் புதிய அட்வென்ச்சர் பைக் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், அந்நிறுவனத்தின் இந்திய இணையதளப்பக்கத்தில் இந்த புதிய பைக் மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

பிரிமீயம் ரக க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஹார்லி டேவிட்சன் மிகவும் பாரம்பரியமான நிறுவனமாகவும், அதிக வாடிக்கையாளர் வட்டத்துடன் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், அட்வென்ச்சர் ரக பைக் மாடல்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை மனதில் வைத்து, புதிய மாடலை உருவாக்கி இருக்கிறது.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

பான் அமெரிக்கா 1250 என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல்கள் உலக அளவில் ஹார்லி டேவிட்சன் பைக் பிரியர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய அட்வென்ச்சர் பைக் மாடலை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

இதற்காக, அந்நிறுவனம் தனது இந்திய இணையதளத்தில் பான் அமெரிக்கா 1250 பைக்கை பட்டியலிட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த புதிய அட்வென்ச்சர் வகை பைக் மாடலின் முகப்பு மிகவும் விசித்திரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

அதேநேரத்தில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் பல்வேறு பிரிமீயம் அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், 6.8 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. நேவிகேஷன் வசதியுடன் பைக் இயக்கம் குறித்த பல்வேறு தரவுகளையும் அளிக்கும். எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், சொகுசான டியூவல் சீட் அமைப்பு, 5 வோல்ட் யுஎஸ்பி சி போர்ட் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் ரிவர் ராக் கிரே, விவிட் பிளாக் என இரணஅடு வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதனுடன், ஸ்பெஷல் வேரியண்ட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வேரியண்ட்டில் டெட்வுட் க்ரீன், பாஜா ஆரஞ்ச், கன்லெட் க்ரே மெட்டாலிக் மற்றும் ஸ்டோன் வாஷ்டு ஒயிட் பியர்ல் ஆகிய வண்ணத் தேர்வுகள் இடம்பெறும்.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கில் 1252சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎஸ் பவரையும், 128 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரோடு ஸ்போர்ட், ரெயின், ஆஃப்ரோடு மற்றும் ஆஃப்ரோடு ப்ளஸ் ஆகிய ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட உள்ளன.

 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம்!

வரும் ஜூன் மாதத்தில் இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் பைக் மாடல்களை ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Harley-Davidson has listed Pan America ADV Bike on Indian website and it is expected to launch June, this year.
Story first published: Monday, April 12, 2021, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X