ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

உலகளவில் மிக பெரிய அளவிலான எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்ட பான் அமெரிக்கா மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு பணிகள் யுஎஸ்ஏ, பென்சில்வேனியா நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

தற்போது தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலகளாவிய அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். இந்தியாவிலும் இந்த பைக் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.

இதன் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டதை வீடியோவாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் முதல் பான் அமெரிக்கா பைக் தயாரிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்தியாவில் இருந்த தொழிற்சாலையினை கடந்த ஆண்டில் மூடிய இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்ட், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கில் 1,252சிசி ரெவோல்யூஷன் மேக்ஸ் வி-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. இத்தகைய என்ஜினை பெறும் முதல் ஹார்லி-டேவிட்சன் பைக் மாடல் இதுவாகும்.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

லிக்யூடு-கூல்டு என்ஜினான இது அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 150 பிஎச்பி மற்றும் 6,750 ஆர்பிஎம்-ல் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

பான் அமெரிக்கா பைக்கின் எரிபொருள் திறன் 20.4 kmpl ஆகும். ஸ்டாண்டர்ட் & ஸ்பெஷல் என இரு விதமான வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த 1250சிசி பைக்கின் ஸ்பெஷல் வேரியண்ட்டில் சில பிரத்யேகமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்த அம்சங்களில் வாகன லோடு கண்ட்ரோல் உடன் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன், டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம், ஸ்டாண்டர்ட் செண்டர் ஸ்டாண்ட், அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய பின்பக்க ப்ரேக் பெடல், அலுமினியம் சறுக்கு-தட்டு, ஹீட்டட் கைப்பிடிகள், ஸ்டேரிங் டேம்பர், அடாப்டிவ் ஓட்டுனர் இருக்கையின் உயரம் மற்றும் ட்யுல்லெஸ் ஸ்போக்டு சக்கரங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

இதில் எந்தவொரு மோட்டார்சைக்கிளிலும் தற்போது வரையில் வழங்கப்படாமல் இருக்கும் அடாப்டிவ் ரைடு ஹைய்ட் (ARH) வசதி இயக்கத்தின்போது இருக்கும் பைக்கின் 890மிமீ உயரத்தை நிறுத்தத்திற்கு கொண்டுவரப்படும் 855மிமீ ஆக குறைத்துவிடுமாம்.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியது!! இந்தியாவில் அறிமுகமாகுமா?

அதேபோல் இரு வேரியண்ட்களிலும் வெவ்வேறான நிறத்தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவில் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக் நடப்பு 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம். இதன் இரு வேரியண்ட்களின் விலைகள் நம் நாட்டில் ரூ.20 லட்சம் மற்றும் ரூ.22 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Harley-Davidson Pan America Production Begins; India Launch Later In 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X