ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது, இந்தியா பைக் வீக் 2021 திருவிழாவின் மூலம், ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கை (Harley-Davidson Sportster S) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கின் விலை 15.51 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில், 1250 சிசி, லிக்யூட்-கூல்டு, வி-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பான் அமெரிக்கா 1250 அட்வென்ஜர் டூரர் பைக்கிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 121 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில், ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என 3 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்ற வகையில் ரைடிங் மோடை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பும் இந்த பைக்கின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

அதே நேரத்தில் இந்த பைக்கின் முன் பகுதியில் 4 பிஸ்டன் பிரம்போ பிரேக் காலிபர்கள் உடன் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் சிங்கிள் பிரம்போ பிரேக் காலிபர் உடன் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 17 இன்ச் வீலும், பின் பகுதியில் 16 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கின் நீளம் 2,265 மிமீ ஆகும். அதே சமயம் இந்த பைக்கின் அகலம் 843 மிமீ ஆகவும், உயரம் 1,089 மிமீ ஆகவும் இருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸ் நீளம் 1,519 மிமீ ஆகும். அதே சமயம் இந்த பைக்கின் இருக்கை உயரம் 752 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் வெறும் 93 மிமீ ஆகவும் உள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

இந்த பைக்கின் எரிபொருள் டேங்க்கில் 11.8 லிட்டர்கள் எரிபொருளை நிரப்ப முடியும். மேலும் 3 லிட்டர்கள் ரிசர்வ் ஆக இருக்கும். அதே சமயம் இந்த பைக்கின் எடை 228 கிலோ ஆகும். ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கின் டிசைனும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பைக்கின் முன் பகுதியில் செவ்வக வடிவ எல்இடி ஹெட்லேம்ப் தனித்து தெரிகிறது. அத்துடன் இந்த பைக்கின் பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள டெயில்லைட்டும் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில் வட்ட வடிவ 4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெற்றுள்ளது. ஹார்லி டேவிட்சன் ஆப் உடன் இணைக்கும்போது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியையும் இது வழங்கும். இது மிகவும் சிறப்பான ஒரு வசதியாக பார்க்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் அறிமுகம்... இந்த பைக்கின் விலை இத்தனை லட்ச ரூபாயா?

மேலும் ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில், கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் யூஎஸ்பி சி சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது விலை உயர்ந்த தயாரிப்பாக இருந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்காக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Harley davidson sportster s launched in india check details here
Story first published: Sunday, December 5, 2021, 9:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X