ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

அமெரிக்காவை சேர்ந்த ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் அதன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் பைக்குகளின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

ஹார்லி டேவிட்சன் பிராண்ட் சமீபத்தில் இந்திய சந்தையை விட்டு வெளியேறி இருந்தது. இந்தியாவில் இருந்த இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட்டது. அதற்கு பதிலாக ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து செயல்படவுள்ளதாக இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

இதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக இந்த பைக்குகளின் பெயர்கள் ஹார்லி-டேவிட்சனின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட், ஹார்லி-டேவிட்சனின் ஆரம்ப-நிலை விலை குறைவான மோட்டார்சைக்கிள்களாகும். இவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதால் இனி விலை குறைவான ஹார்லி டேவிட்சன் பைக்காக அயர்ன் 883 விளங்கவுள்ளது.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதால் அனைத்து ஹார்லி-டேவிட்சன் பைக்குகளும் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் (சிபியு) இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனை நிறுத்தப்பட்ட ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலை கடைசியாக ரூ.65,000 வரையில் குறைக்கப்பட்டு இருந்தது.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

விலை குறைப்பிற்கு பிறகு ஸ்ட்ரீட் 750 அர்பன் க்ரூஸரின் ஆரம்ப விலை ரூ.4.69 லட்சமாக இருந்தது. அதுவே ஸ்ட்ரீட் ராட் ரூ.6.55 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் என்ற இரு மோட்டார்சைக்கிளிலும் ஒரே மாதிரியான பிஎஸ்6 இணக்கமான 749சிசி, வி-ட்வின், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டது

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

இந்த என்ஜின் ஸ்ட்ரீட் 750 பைக்கில் 55 பிஎச்பி மற்றும் 60 என்எம் டார்க் திறனையும், ஸ்ட்ரீட் ராட் பைக்கில் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 65 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. இரு பைக்கிலும் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

இந்த இரு ஹார்லி-டேவிட்சன் பைக்கிலும் பிசியான நகர்புற சாலைக்கு ஏற்ப தாழ்வான ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டது. கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், முன்னோக்கி பொருத்தப்பட்ட ஓட்டுனர் கால்வைக்கும் பகுதி, உயரமாக பொருத்தப்பட்ட ஹேண்டில்பார் உள்ளிட்டவை இவற்றில் வழங்கப்பட்ட பாகங்களாகும்.

ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...

ஸ்ட்ரீட் ராட் பைக்கில் அதன் எக்ஸ்ஷோரூம் விலைக்கு ஏற்ப அகலமான ஹேண்டில்பார், ராட்சத ரேடியேட்டர், வட்ட-வடிவிலான எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், டெயில்லேம்ப்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள், கருப்பு நிறத்தில் நீண்ட எக்ஸாஸ்ட் குழாய்கள், நன்கு குஷின் வழங்கப்பட்ட ஓட்டுனர் மற்றும் பின் இருக்கைகள் போன்றவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Harley Davidson Street 750 & Street Rod Discontinued In India: Removed From Website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X