அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

விரைவில் உலகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள ஹார்லி டேவிட்சனின் 1250 கஸ்டம் பைக்கின் புதிய டீசர் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

இந்தியாவில் உள்ள தொழிற்சாலையை மூடி நமது இளைஞர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலகளவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ள பான் அமெரிக்கா 1250 அட்வென்ச்சர்-டூரிங் பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

அதனை தொடர்ந்து தற்போது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஹார்லி டேவிட்சன் 1250 கஸ்டம் பைகின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 1250 கஸ்டம் பைக் முதன்முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கான்செப்ட் மாடலாக வெளியிடப்பட்டது.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

ஆனால் இந்த டீசர் படங்களில் பைக் கிட்டத்தட்ட விற்பனைக்கு தயாரான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த படங்களில் ஹார்லி டேவிட்சனின் ஃபாட் பாய் மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் காட்சியளிக்கும் புதிய 1250 கஸ்டம் பைக் பெரிய அளவில் அதன் கான்செப்ட் வெர்சனை தான் ஒத்து காணப்படுகிறது.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

இருப்பினும் கூடுதலாக சற்று உயரத்தில் வழங்கப்பட்டுள்ள இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களுக்கு மேற்புறத்தில் சூட்டில் இருந்து கால்களை பாதுகாக்கும் தகடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெரிய ரேடியேட்டர், ஹேண்டில் பாரின் முனைகளில் வட்ட வடிவிலான கண்ணாடிகள், புதிய ப்ரேக் பெடல் மற்றும் பின்பக்கத்தில் ப்ரெம்போ ப்ரேக் காலிபர்களையும் பார்க்க முடிகிறது.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

மேலும், வட்ட வடிவிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்விட்ச் கியரில் அதிகளவில் பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளதையும் இந்த டீசர் படங்களில் பார்க்கலாம். இதில் இருந்து சமீபத்திய பான் அமெரிக்கா 1250 பைக்கில் வழங்கப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை இந்த 1250சிசி பைக்கிலும் எதிர்பார்க்கலாம் என்பது தெரிகிறது.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

அதேபோல் அந்த அட்வென்ச்சர் பைக்கில் பொருத்தப்பட்ட அதே என்ஜின் தான் சற்று திருத்தியமைக்கப்பட்டு புதிய 1250 கஸ்டம் பைக்கிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் ஸ்போர்ட்ஸ்டர் வரிசை பைக்குகளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நிறுத்தி இருந்ததால் அவற்றிற்கு மாற்றாக 1250 கஸ்டம் பைக் அங்கு கொண்டுவரப்படலாம்.

அடுத்த 1250சிசி பைக்கின் டீசரை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன்!! இரு சைலன்சர்களுடன் சும்மா பட்டையை கிளப்புது...

ஆனால் எப்படியிருந்தாலும், அறிமுகத்தில் இருந்து 2021 இறுதி வரையில் இந்த பைக் அமெரிக்க சந்தையில் மட்டுமே விற்பனையில் இருக்கும். இதன் இந்திய அறிமுகத்தை அடுத்த 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Upcoming Harley-Davidson 1250 Custom teased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X