நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

நிகழ் காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பிரத்யேகமாக தொகுத்து வழங்கியிருக்கின்றோம். டாப் ஐந்து ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலே இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு உண்டு. பன்முக பயன்பாட்டைக் கொண்டவை ஸ்கூட்டர்கள் என்பதால் ஆண், பெண் என இரு பாலர்கள் மத்தியிலும் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பு சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

எனவே இந்திய சந்தையில் ஸ்கூட்டர்களின் அறிமுகம் சற்று அதிகம். இருப்பினும், ஒரு சில மாடல் ஸ்கூட்டர்கள் மட்டுமே இந்தியர்களின் மனம் கவர்ந்தவையாக காட்சியளிக்கின்றன. அவை எவை?, அவற்றின் சிறப்புகள் என்ன?, என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக ஐந்து முக்கியமான தயாரிப்புகள் பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G)

ஹோண்டா ஆக்டிவா 6ஜி இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் இதுவாகும். இந்தியர்கள் மத்தியல் நற்சான்றை பெற்ற ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் 1999ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது குறிப்பிடத்தகுந்தது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

தற்போது ஆறாம் தலைமுறை ஆக்டிவா இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது மிக சிறந்த வெர்ஷனாக பார்க்கப்படுகின்றது. புதிய ஹோண்டா ஆக்டிவா 6 ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், 12 இன்ச் வீல் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வாய் பகுதி, ப்யூவல் இன்ஜெக்சன் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் இதில் வழங்கப்படுகின்றன.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

ஹோண்டா ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டரில் 110சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 7.68 பிஎச்பி பவரையும், 5,250 என்எம் டார்க்கில் 8.79 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. தற்போது நிலவரப்படி 6ஜி ஆக்டிவா ரூ. 69,645 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

சுசுகி அக்செஸ் 125 (Suzuki Access 125):

சுசுகி நிறுவனம் அக்செஸ் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் முதல் முறையாக 2007ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஸ்கூட்டராக அக்செஸ் இருக்கின்றது. அதிலும், அக்செஸ் 125 தேர்விற்கு இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு நிலவ தொடங்கியுள்ளது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் அதிக மைலேஜ் மற்றும் அதிக சிறப்பம்சங்கள் என்ற யுக்தியில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 தர 124சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 8.6 பிஎச்பி மற்றும் 10 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைப்படி இந்த ஸ்கூட்டர் ரூ. 73,400 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

டிவிஎஸ் என்டார்க் 125 (TVS NTorq 125):

டிவிஎஸ் நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட ஸ்கூட்டராக என்டார்க் 125 இருக்கின்றது. அதேசமயம், 125 சிசி எஞ்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களிலேயே அதிக திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டராகவும் இது காட்சியளிக்கின்றது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் நிறுவனம் 125 சிசி திறன் கொண்ட 3 வால்வ் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9.25 பிஎச்பி மற்றும் 10.25 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக ப்ளூடூத் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப் என எக்கசக்க அம்சங்களை டிவிஎஸ் வழங்குகின்றது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டரை ரேஸ் எக்ஸ்பி எனும் தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது. இந்த தேர்வு அதிகபட்சமாக 10.1 பிஎச்பி மற்றும் 10.8 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. என்டார்க் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை தேர்வின் விலை ரூ. 72,270 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter):

டிவிஎஸ் ஜூபிடர் இந்தியாவில் முதன் முதலாக 2013ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகமானது. இது விற்பனைக்கு அறிமுகமாகிய ஐந்தாவது ஆண்டில் நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தகுந்தது. இது அதிக சிறப்பு வசதிகள் கொண்ட குடும்பத்திற்கான இருசக்கர வாகனமாக பார்க்கப்படுகின்றது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

வெளிப்புற எரிபொருள் நிரப்பும் தொட்டி, எல்இடி ஹெட்லேம்ப், 21 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் 109.7 சிசி திறன் கொண்ட பிஎஸ்6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7.8 பிஎச்பி மற்றும் 8.8 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த ஸ்கூட்டரை மிக விரைவில் டிவிஎஸ் நிறுவனம் 125 சிசி திறனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது. தற்போது டிவிஎஸ் ஜூபிடர் ரூ. 65,673 என்ற முன் தொகையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro):

நாம் ஐந்தாவதாக பார்க்க இருப்பது ஓலா மின்சார ஸ்கூட்டர் பற்றிய தகவலே ஆகும். இந்த ஸ்கூட்டரை மிக சமீபத்திலேயே ஓலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய கையோடு புக்கிங் பணியையும் நாட்டில் தொடங்கியது. புக்கிங் தொடங்கப்பட்ட ஒற்றை நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்தனர்.

நிகழ்காலத்தின் இந்தியாவின் மிக சிறந்த ஸ்கூட்டர்கள் எது? டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ!

இந்திய வரலாற்றிலேயே ஒரு வாகனத்திற்கு இத்தகைய வரவேற்பு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். ஆகையால், நாட்டில் மிக அமோகமான வரவேற்பைப் பெறும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஓலா எஸ்1 ப்ரோ மாறியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 50 லிட்டர் ஸ்டோரேஜ் அளவு, 4ஜி இணைப்பு வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் வசதி, எல்இடி ஹெட்லைட் என எக்கசக்க அம்சங்களுடன் ஓலா ஸ்கூட்டர் உருவாகியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Here is list of top 5 scooters in india right now
Story first published: Tuesday, October 5, 2021, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X