வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் டூ-வீலர்களின் பட்டியலை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். என்னென்ன இருசக்கர வாகனங்கள் களமிறங்க இருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

2021ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் இந்திய இருசக்கர வாகன விரும்பிகளுக்கு ஓர் மறக்க முடியாத மாதமாக அமைய இருக்கின்றது. ஆமாங்க, இந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடங்கி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தலைமுறை கிளாசிக் 350 வரை பல இரு சக்கர வாகனங்கள் வரும் ஆகஸ்டு மாத்திலேயே விற்பனைக்கு வர இருக்கின்றன. இவற்றுடன் இன்னும் சில புதிய அப்கிரேட் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களும் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

ராயல் என்பீல்டு கிளாசிக் 350:

இந்தியர்களின் மிகவும் விருப்பமான இருசக்கர வாகன மாடல்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ம் ஒன்று. இந்த பைக்கை புதுப்பிக்கப்பட்ட ஓர் மாடலாக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க ராயல் என்பீல்டு ஆயத்தமாகி வருகின்றது. ஏற்கனவே இப்பைக்கை இந்திய சாலைகளில் வைத்து நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தத் தொடங்கிவிட்டது.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

இத்துடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் செய்துவிட்டது. இந்த அறிமுக நிகழ்வு இந்த மாத நிகழ்ந்து விடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆகையால், இந்திய இளைஞர்கள் இந்நிகழ்வை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய எஞ்ஜின், ஃப்ரேம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் என இந்திய இருசக்கர வாகன சந்தையை பட்டைய கிளப்பும் வகையில் கிளாசிக் 350 தயாராகியிருக்கின்றது.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

இந்திய இருசக்கர மற்றும் மின் வாகன பிரியர்கள் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் குவிந்துள்ளன. இது புக்கிங் தொடங்கப்பட்ட ஒரே நாளில் கிடைத்த புக்கிங்கின் எண்ணிக்கையாகும்.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபேம்-2 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியம் அண்மையில் அதிகரிக்கச் செய்யப்பட்டிருப்பதால் இந்த குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், வரும் ஆகஸ்ட் மாதத்தில் மின்சார ஸ்கூட்டரின் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

சிம்பிள் ஒன்:

இது ஓர் மின்சார ஸ்கூட்டராகும். இந்திய நிறுவனம் தயாரித்து வரும் மிக சிறப்பு வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. ஆம், ஒற்றை முழுமையான சார்ஜில் 250 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் சிம்பிள் ஒன் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி அரங்கேற இருக்கின்றது. இது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏத்தல் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐ க்யூப் உள்ளிட்ட மின்சார இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

பிஎம்டபிள்யூ சி400 ஜிடி

இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், இந்த பிரிவில் மிக குறைந்தளவில் மட்டுமே வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற சி400 ஜிடி மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

இதன் அறிமுகமும் வரும் ஆகஸ்டு மாதத்திலேயே அரங்கேற இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ரூ. 5 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலையில் அது விற்பனைக்கு வருமானால் இந்தியாவின் மிக விலையுயர்ந்த மேக்ஸி ரக ஸ்கூட்டராக சி400 ஜிடி ஸ்கூட்டர் மாறும்.

வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது! என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா?

ஹோண்டா ஹார்னெட் 2.0 அடிப்படையிலான ஏடிவி:

ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் 2.0 அடிப்படையிலான ஓர் அட்வென்சர் ரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே செய்துமுடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வரும் ஆகஸ்டு மாதத்தின் இறுதிக்குள் இதன் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 1.20 லட்சம் அல்லது ரூ. 1.50 லட்சத்திற்குள் இது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here Is The List of August Launch Two Wheelers: Classic 350 To Ola e-Scooter. Read In Tamil.
Story first published: Friday, July 30, 2021, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X