இந்த பைக் அழாகனது மட்டுமல்ல! அதிக சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இருக்கு! BSA GoldStar650 பற்றிய 5முக்கிய தகவல்!

பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார் 650 (BSA GoldStar650) பைக்கில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அசங்களை பற்றி விளக்கும் வகையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த பைக் அழாகனது மட்டுமல்ல... நிறைய சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இருக்கு! BSA GoldStar650 பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

மஹிந்திரா குழுமத்திற்கு (Mahindra Group) சொந்தமானது கிளாசிக் லெஜன்ட்ஸ் (Classic Legends) நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி பிராண்டுகளாக ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi) மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் (BSA Motorcycles) ஆகியவை இருக்கின்றன. ஏற்கனவே, ஜாவா நிறுவனத்தின் மறு வருகை அமைந்துவிட்ட நிலையில் தற்போது யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகியவற்றின் மறு வருகை மிக விரைவில் அமைய இருக்கின்றன.

இந்த பைக் அழாகனது மட்டுமல்ல... நிறைய சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இருக்கு! BSA GoldStar650 பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

இதுகுறித்த தகவலை யெஸ்டி நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. பிஎஸ்ஏ நிறுவனம் அதன் புதுமுக மோட்டார்சைக்கிளான கோல்ட்ஸ்டார் 650 (BSA GoldStar650) இன் வெளியீட்டின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த பைக் முற்றிலும் கவர்ச்சியான ஓர் தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பைக் அழாகனது மட்டுமல்ல... நிறைய சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இருக்கு! BSA GoldStar650 பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் முற்றிலும் ரெட்ரோ ஸ்டைலில் இப்பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை கவர்ச்சியான வாகனமாக மட்டுமின்றி அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய மோட்டார்சைக்கிளாகவும் பிஎஸ்ஏ உருவாக்கியிருக்கின்றது. அந்தவகையில் இப்பைக்கில் நாம் அறிய ஐந்து முக்கிய தகவல்களையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சூப்பரா இருக்குங்க... BSA Goldstar 650 பைக்கை வெளியீடு செஞ்சிட்டாங்க... இப்பவே இத வாங்கணும் போலிருக்கு!

வடிவமைப்பு (Design)

பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் மிகவும் அழகிய ரெட்ரோ ஸ்டைலை தாங்கியிருக்கின்றது. இதன் கிளாசியான தோற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், கண்ணீர் துளி வடிவிலான எரிபொருள் தொட்டி (12 லிட்டர் கொள்ளளவு கொண்டது), ஒற்று துண்டு அமைப்பு இருக்கை, ஒயர் ஸ்போக் வீல்கள், வட்ட வடிவ பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் உள்ளிட்டவை பைக்கில் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சூப்பரா இருக்குங்க... BSA Goldstar 650 பைக்கை வெளியீடு செஞ்சிட்டாங்க... இப்பவே இத வாங்கணும் போலிருக்கு!

மேலே பார்த்த கூறுகளைப் போலவே பைக்கின் எஞ்ஜினும் பழைய ஸ்கூல் பையனைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த கையாளுதல் பழைமை மாறா யுக்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 213 கிலோவாகும். ஆகையால், மிகவும் பிரமாண்டமான தோற்றம் கொண்ட இலகு ரக வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

சூப்பரா இருக்குங்க... BSA Goldstar 650 பைக்கை வெளியீடு செஞ்சிட்டாங்க... இப்பவே இத வாங்கணும் போலிருக்கு!

சேஸிஸ் மற்றும் ஹார்ட்வேர் அம்சங்கள்

பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார் 650 பைக் ட்யூப்ளர் ட்யூவல்-க்ரேடில் ஸ்டீல் ஃப்ரேமால் உருவாக்கப்பட்டுள்ளது. மிக சிறந்த ஸ்டெபிளிட்டி மற்றும் ஹேண்ட்லிங்கிற்கு இது உறுதுணையாக இருக்கும். இத்துடன், சிறந்த சஸ்பென்ஷனுக்காக 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன் பக்கத்திலும், ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் ட்வின் ஷாக்குகள் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, பைக்கின் முன் பக்கத்தில் 18 இன்ச் அளவுள்ள ஒயர் ஸ்போக் வீலும், பின் பக்கத்தில் 17 இன்ச் ஒயர் ஸ்போக் வீலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சூப்பரா இருக்குங்க... BSA Goldstar 650 பைக்கை வெளியீடு செஞ்சிட்டாங்க... இப்பவே இத வாங்கணும் போலிருக்கு!

சிறப்பம்சங்களின் பட்டியல்

பார்ப்பதற்கு பழைய ஸ்கூல் பையனைப் போன்று இந்த கோல்ட்ஸ்டார் 650 காட்சியளித்தாலும் அது தாங்கியிருக்கும் அனைத்து அம்சங்களும் நவீன காலத்திற்கு ஏற்றதாகக் காட்சியளிக்கின்றது. ஸ்பீடோ மற்றும் டேக்கோமீட்டர்கள், எல்சிடி எம்ஐடி திரை, எல்இடி மின் விளக்குகள் (ஹெட்லேம்ப் மட்டும் ஹாலோஜனாக பயன்படுத்தப்பட்டுள்ளது), 12வோல்ட் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

சூப்பரா இருக்குங்க... BSA Goldstar 650 பைக்கை வெளியீடு செஞ்சிட்டாங்க... இப்பவே இத வாங்கணும் போலிருக்கு!

எஞ்ஜின்

கோல்ட் ஸ்டார் பைக்கில் 652 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 4 வால்வு, டிஓஎச்சி மோட்டாராகும். இது அதிகபட்சமாக 45 பிஎஸ் மற்றும் 55 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜினில் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இது இயங்குகின்றது.

சூப்பரா இருக்குங்க... BSA Goldstar 650 பைக்கை வெளியீடு செஞ்சிட்டாங்க... இப்பவே இத வாங்கணும் போலிருக்கு!

அறிமுகம் எப்போது?

இங்கிலாந்தின் பர்கிங்காம் பகுதியிலேயே இந்த பைக் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. வரும் 12ம் தேதி வரை இப்பைக் அங்கு காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. முதலில் இப்பைக் இங்கிலாந்து நாட்டிலேயே விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக் அழாகனது மட்டுமல்ல... நிறைய சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இருக்கு! BSA GoldStar650 பற்றிய 5 முக்கிய தகவல்கள்!

ஆனால், அது எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களுக்கு இப்பைக் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிரீமியம் தோற்றம் ராயல் என்பீல்டு 650, கவாஸாகி டபிள்யூ800, டிரையம்ப் போனவில்லே ஸ்ட்ரீட் ட்வின் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமைய இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.

Most Read Articles
English summary
Here is top 5 things to know bsa gold star 650 motorcycle
Story first published: Saturday, December 4, 2021, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X