ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. முன்பைக் காட்டிலும் பல மடங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து காணப்படுவதே இதற்கு சான்று. பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாற்றாக மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

இதற்காக வழங்கப்படும் சலுகை மற்றும் கிடுகிடுவென உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை தொடர்ச்சியாக மின் வாகனங்களின் எண்ணிக்கை உயரச் செய்து வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர தொடங்கியது முதல் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

மக்கள் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அதிகளவில் வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இது தொடர் உயர்வைக் கண்டு பெட்ரோல் விலையுயர்வில் இருந்து தங்களின் பர்சை (பணத்தை) பாதுகாப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

இந்தநிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில் நாட்டில் ஒற்றை சார்ஜில் அதிக ரேஞ்ஜ் தரும் (அதிக தூரம் செல்லும்) மின்சார இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம். டாப் 5 எலெக்ட்ரிக் டூ வீலர்கள் பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

பென்லிங் அவுரா:

பென்லிங் அவுரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 93,200 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு சுமார் 60 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதுவே இதன் டாப் ஸ்பீடாகும். இந்த வாகனம் ஒற்றை முழுமையான சார்ஜில் 120கிமீ தூரம் வரை பயணிக்கும். ஈகோ மோடில் செல்லும்போதே இந்த ரேஞ்ஜ் திறனை அவரா வழங்கும். பியாஜியோ வெஸ்பா ஸ்டைலில் இந்த மின்சார ஸ்கூட்டர் காட்சியளிக்கும்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

ஒகினவா ஐ-பிரைஸ்

வெகு நீண்ட காலமாக இந்திய மின் வாகன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்யும் நிறுவனமாக ஒகினவா இருக்கின்றது. இது விற்பனைச் செய்யும் அதிக ரேஞ்ஜ் தரும் மின்சார ஸ்கூட்டராக ஒகினவா ஐ-ப்ரெஸ் இருக்கின்றது. இது, ரூ. 1.09 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனத்தில் 3.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 139கிமீ தூரம் வரை செல்லும். இதில் 2.5kW திறன் கொண்ட பிஎல்டிசி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக், அலாய் வீல் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

ஹீரோ எலெக்ட்ரிக் நைக்ஸ் எச்எக்ஸ்:

ஹீரோ எலெக்ட்ரிக் நைக்ஸ் எச்எக்ஸ் ஓர் நீளமான மின்சார ஸ்கூட்டராகும். இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 165 கிமீ ரேஞ்ஜ் வழங்கும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ விற்பனைக்கு களமிறக்கியது. இதன் விலை ரூ. 64,640 ஆகும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 42 கிமீ ஆகும். இது இரட்டை பேட்டரி செட்-அப் கொண்ட வாகனம் ஆகும். 51.2 V/30 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

ஒடைசி ஹாவ்க் ப்ளஸ்:

ஒடைசி ஹாவ்க் ப்ளஸ் ஓர் முழுமையான சார்ஜில் 170கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்தியாவில் மிக குறுகிய டீலர்கள் வாயிலாக மட்டுமே நிறுவனத்தின் மின் வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஒடைசி ஹாவ்க் ப்ளஸ் மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் போதும் என கூறப்படுகின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... இந்த லிஸ்ட பாத்தீங்க பெட்ரோல் வண்டி பக்கம் ஒதுங்ககூட மாட்டீங்க!

ரிவோல்ட் ஆர்வி 300:

ரிவோல்ட் நிறுவனம் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 ஆகிய இரு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், அதிக ரேஞ்ஜை தரும் எலெக்ட்ரிக் பைக்காக ஆர்வி300 மாடல் இருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் ரூ. 1.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Here Is Top 5 Electric Two-wheelers List With Highest Range On Single Charge. Read In Tamil.
Story first published: Friday, July 30, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X