Bounce இ-ஸ்கூட்டரின் விலை ரொம்ப கம்மியா இருக்கு! அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது?

பவுன்ஸ் (Bounce) நிறுவனம் பேட்டரி இல்லாமல் அதன் இன்ஃபினிட்டி இ1 (Infinity E1) ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களுக்கு ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படும் என்பது பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் பவுன்ஸ் (Bounce). இந்நிறுவனம், நேற்றைய (நவம்பர் 2) தினம் இன்ஃபினிட்டி இ1 (Infinity E1) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

மின் வாகன மொபிலிட்டியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வந்த இந்நிறுவனம், மின் வாகன உற்பத்தியில் களமிறங்கிய பின்னர் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் மின்வாகன தயாரிப்பு இதுவாகும். மிகப் பெரியளவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு நீடித்து வந்தநிலையில் நேற்றைய தினம் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

சற்றே குறைவான விலையில் இன்ஃபினிட்டி இ1விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மின் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், இந்த பிரிவில் போட்டியும் சற்றே அதிகரித்துக் காணப்படுகின்றது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

இதில் தங்களின் தயாரிப்பு மாபெரும் வெற்றியைக் காண வேண்டும் என்பதற்காக நிறுவனம் முன்னெடுத்திருக்கும் தனித்துவமான நடவடிக்கையே பேட்டரி இல்லாமல் இ ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கும் முயற்சி ஆகும். என்னது பேட்டரி இல்லாமல் மின்சார வாகனமா?, இந்த திட்டம் எப்படிங்க வேலைக்காகும். இதை விளக்கும் வகையிலேயே இந்த பதிவை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

பேட்டரி இல்லாமல் இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான பின்னர், பல்வேறு கேள்விகள் இதுகுறித்து எழும்பின. ஒரு சிலர், "பேட்டரி இல்லாமல் ஸ்கூட்டரை வாங்கிட்டு அதை என்ன தள்ளிட்டா போறது" என்றெல்லாம் கூட நக்கலடித்து வருகின்றனர். நிறுவனம், ஸ்கூட்டரின் அறிமுகத்தோடு 'பேட்டரி ஓர் சேவை' (Battery-As-A-Service) தனித்துவமான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

இத்திட்டத்தின் வாயிலாக நிறுவனம் நாட்டின் பல்வேறு மூலைகளில் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இந்த மையங்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வாடகையின் அடிப்படையில் வழங்கும். அதாவது, இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டருக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

இவ்வாறு பேட்டரியை வாடகைக்கு பெறுவதன் வாயிலாக பல்வேறு பலன்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க இருக்கின்றது. குறிப்பாக, இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரி மிகவும் குறைவான விலையில் பெற்றுக் கொள்ள முடியும். பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 மின்சார ஸ்கூட்டரை பேட்டரி உடன் ரூ. 68,999-க்கு விற்பனைச் செய்ய இருக்கின்றது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

இதே மின்சார ஸ்கூட்டர் பேட்டரி மற்றும் சார்ஜர் கருவி இல்லாத நிலையில் ரூ. 36 ஆயிரத்து விற்பனைக்குக் கிடைக்கும். இதன் வாயிலாக பல மடங்கு பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். அதேநேரத்தில், நிறுவனத்தின் ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையம் வாயிலாக மின் வாகனத்திற்கு தேவையான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியையும் கட்டணத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

பொதுவாக மின்சார வாகனங்கள் என்றாலே விலை அதிகம் மற்றும் சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும் என பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இவற்றை உடைக்கும் பொருட்டே, பவுன்ஸ் நிறுவனம் பிற பிராண்டுகளில் இருந்து மாறுபட்டு செயல்பட தொடங்கியிருக்கின்றது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

நிறுவனம் ஆறு பேட்டரியை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக் கூடிய ஸ்வாப்பபிள் மையங்களை நாடு முழுவதும் நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இங்கு சார்ஜ் தீர்ந்த பேட்டரியை ஒப்படைத்து விட்டு, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை பெற்றுக் கொள்ள முடியும். ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களை எளிதில் கண்டறிய நிறுவனம் பிரத்யேக செயல்போன் செயலியை அறிமுகம் செய்திருக்கின்றது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

இதனைக் கொண்ட பவுன்ஸ் நிறுவனத்தின் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் எங்கு இருக்கின்றது என்பதை துள்ளியமாகக் கண்டறிய முடியும். இந்த மையங்களில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பெறுவதற்கு நிறுவனம் சந்தா திட்டங்களை வழங்க இருக்கின்றது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

காத்திருப்பு நேரம் பூஜ்ஜியம்

வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை மின்வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆனால், அவற்றில் வைத்து சார்ஜ் செய்தால் குறிப்பிட்ட மின் வாகனத்தின் பேட்டரி முழுமையாக சார்ஜாக 5 முதல் 6 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதேநேரத்தில், 30 முதல் 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறனில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களும் நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

ஆனால், அவற்றின் இருப்பு மிகவும் அரிதாக தென்படுகின்றது. நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் கூட இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆகையால், இந்த வேகமான உலகில் யாரும் அதிக நேரத்தைச் செலவிட தயாராக இருக்க மாட்டார்கள். இத்தகையோருக்கு ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்கள் பெரும் உதவியாக அமைய இருக்கின்றன.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

இந்த நிலையங்கள் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை நொடிப் பொழுதில் மாற்றிக் கொள்ள முடியும். ஓர் பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை நிரப்புவதைக் காட்டிலும் மிகக் குறைவான இதற்கு தேவைப்படும். ஆகையால், நேரத்தை மிச்சப்படுத்துவோர்க்கு இந்த நிலையங்கள் மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

விலை கம்மியா இருக்கு... அதுக்குனு பேட்டரி இல்லாம வாங்கிட்டு ஸ்கூட்டர எப்படி ஓட்டுறது? பவுன்ஸின் லாபம் தரும் திட்டம் பற்றிய முழு விபரம்!

எனவே பவுன்ஸ் நிறவனத்தின் பேட்டரி ஓர் சேவைக்கு மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. தற்போது பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் வழங்கப்படுகின்றது. ஏசி சார்ஜர் மற்றும் பேட்டரியுடன் கூடிய இன்ஃபினிட்டி இ1 என்ற தேர்விலும், பேட்டரி இல்லாமல் இன்ஃபினிட்டி இ1 என்ற தேர்விலும் வாகனம் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Here we explained bounce battery swap system how its work
Story first published: Friday, December 3, 2021, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X