Just In
- 41 min ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 7 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 9 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 12 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- News
அரசியல்வாதிகளை விடாமல் துரத்தும் கொரோனா..பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு தொற்று உறுதி!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.100க்கு சர்வீஸ் -4 நாட்களுக்கு மட்டுமே! ஹீரோவின் அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க... அப்புறம் வறுத்தப்படுவீங்க!
நூறு ரூபாய்க்கு சிறப்பு சர்வீஸை வழங்க இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரத்யேக சர்வீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ஜ் திருவிழாவை தொடங்கியிருக்கின்றது. மார்ச் 5 (நேற்று) தொடங்கி வரும் 8ம் தேதி வரை மட்டுமே இச்சிறப்பு திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என ஹீரோ அறிவித்திருக்கின்றது.

இத்திட்டத்தின் சிறப்புகள் என்ன?
ரூ. 100க்கு சர்வீஸ். ஜிஎஸ்டி வரி தனி.
ரூ. 100க்கு ரோட் சைட் அசிஸ்டண்ட் சேவை.
ரூ. 100க்கு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம்.

எக்ஸ்சேஞ்ஜ் கார்னிவல்; ஏற்கனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகைப் பொருந்தும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய இருசக்கர வாகனத்தை வாங்கும்போது பல்வேறு ஆச்சரிய சலுகைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இதுதவிர இச்சேவையில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாட்டர் வாஷ், பாலிஷிங் மற்றும் நைட்ரஜன் காற்று போன்ற சில சேவைகளை இலவசமாக வழங்கவும் ஹீரோ திட்டமிட்டிருக்கின்றது. இவற்றை வருகின்ற நான்கு நாட்களுக்கு மட்டும் வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

அண்மையில் 100 மில்லியன் வாகன தயாரிப்பு எனும் மாபெரும் சாதனையை நிறுவனம் நிகழ்த்தியது. இதன் கொண்டாட்டத்தின் ஒரு பங்காகவே ரூ. 100க்கு குறிப்பிட்ட சேவைகளை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதுதவிர, 100 மில்லியன் தயாரிப்பு சாதனையைக் குறிக்கும் வகையில் சில பிரத்யேக ஸ்பெஷல் எடிசன் வாகனங்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி நிறுவனம் தயாராகி வருகின்றது.

ஏற்கனவே இந்த சிறந்த எடிசன் வாகனங்கள் பற்றிய தகவலை ஒவ்வொரு மாடலாக அதன் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றது ஹீரோ நிறுவனம். இவை வெகு விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

இந்த நிலையிலேயே இச்சிறப்பு சர்வீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ஜ் திருவிழாவை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதவிர வரும் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட இருப்பதால் அன்றைய தினத்தில் ஸ்கூட்டர்களுக்கு மட்டும் சிறப்பு போனஸை வழங்கை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்கள் தினத்தில் பெண்களுக்கு சிறப்பு மரியாதைச் செலுத்தும் விதமாக இந்த சிறப்பு சலுகையை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த மற்றும் நான்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கக் கூடிய சர்வீஸ் மற்றும் சிறப்பு எக்ஸ்சேஞ்ஜ் திருவிழா பற்றிய மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள ஹீரோ வாகன விற்பனையாளர்களைத் தொடர்பு நிறுவனம் அறிவுறுத்தியிருக்கின்றது.