ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் & டெஸ்டினி ஸ்கூட்டர்களில் ஸ்பெஷல் எடிசன்கள்!! பிரத்யேகமான நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர்களின் 100வது மில்லியன் எடிசன்கள் பிரத்யேகமான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இருசக்கர வாகன விற்பனையில் 100 மில்லியன் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்ததை இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விமர்சையாக கொண்டாடி வருகிறது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹீரோ மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் 100வது மில்லியன் எடிசன்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி பிரபலமான ஸ்பிளெண்டர், பேஷன் ப்ரோ, எக்ஸ்ட்ரீம் 160ஆர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களின் 100வது மில்லியன் ஸ்பெஷல் எடிசன்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அவற்றை தொடர்ந்து தற்போது ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மற்றும் டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களின் 100வது மில்லியன் எடிசன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முறையே ரூ.66,250 மற்றும் ரூ.72,250 என்ற விலைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்கள் ஸ்டாண்டர்ட் மாடல்களில் இருந்து வித்தியாசப்படுவதற்காக இரட்டை-நிற பெயிண்ட்டில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

100வது மில்லியன் ஸ்பெஷல் எடிசன்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை தான் பிரதான நிறங்களாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஃபார்முலா தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டெஸ்டினி ஸ்பெஷல் எடிசன்களிலும் பார்க்க முடிகிறது.

மற்றப்படி பிரத்யேகமான பெயிண்ட்டை தவிர்த்து இந்த ஸ்கூட்டர்களின் வழக்கமான தோற்றம், என்ஜின், சஸ்பென்ஷன், ப்ரேக் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 110.9சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-ல் 8.04 பிஎச்பி மற்றும் 5,750 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜின் உடன் ஸ்கூட்டரின் மொத்த 112 கிலோ ஆகும். இதன் பெட்ரோல் டேங்கில் அதிகப்பட்சமாக 5 லிட்டர் வரையிலான பெட்ரோலை நிரப்பி கொள்ள முடியும்.

டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 9 பிஎச்பி மற்றும் 10.4 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றல்களை பெற முடியும். 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை பெறும் டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் மொத்த எடை 113 கிலோ ஆகும்.

Most Read Articles
English summary
Hero Destini 125, Maestro Edge 110 Million Editions launched in India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X