ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

புதிய நிறத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதை இவ்வாறான புதிய புதிய அறிமுகங்கள் தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரில் ஸ்கார்லெட் சிவப்பு என்ற பிரத்யேகமான பெயிண்ட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

இந்த புதிய பெயிண்ட் தேர்வில் சிவப்பு நிறம் மட்டுமின்றி, நீலம் மற்றும் கருப்பு நிறங்களும் உள்ளன. சிவப்பு தான் பெரும்பான்மையாக உள்ளது. கருப்பு நிறம் ஸ்கூட்டரின் ஃபுட்போர்டு, எக்ஸாஸ்ட் குழாய் என வழக்கமான பாகங்களுடன் வாகனத்தின் பின்பகுதி மொத்தத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

அதேநேரம் ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் மேட் கருப்பு மற்றும் க்ரே நிறங்களையும் பார்க்க முடிகிறது. இந்த புதிய பெயிண்ட் தேர்வை சேர்க்காமலேயே மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் வெர்சனில் சிறப்பு பெயிண்ட்டை தவிர்த்து வேறு எதிலும் மாற்றம் இல்லை.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 110சிசி, ஏர்-கூல்டு என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்குகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8.15 பிஎச்பி மற்றும் 8.75 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்த 100 மில்லியன் எடிசன் உள்பட மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் இந்த ஹீரோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.65,900-இல் இருந்து ரூ.66,900 வரையில் உள்ளன. ரூ.66,900 என்பது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் 100 மில்லியன் எடிசனின் விலை ஆகும். இந்த புதிய ஸ்கார்லெட் சிவப்பு நிறத்திற்காக ஸ்கூட்டரின் விலையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரம் இல்லை.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

இவ்வாறான அறிமுகங்களுடன் இந்த பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் கொண்டாட்டம் நின்றுவிடவில்லை. ஏனெனில் சமீபத்தில் தான் அதன் தயாரிப்புகளுக்கு கவர்ச்சிக்கரமான சலுகைகளை ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்தது இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, பொருத்தமான முன்தொகை, குறைந்த வட்டி விகிதங்கள், விசுவாசத்திற்கான போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

லாயலிட்டி (ஹீரோ பிராண்ட் மீதான விஸ்வாசம்) போனஸாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் தள்ளுபடியாக 2,100 ரூபாயையும், வங்கி கார்ட்டிற்கான உடனடி சலுகையாக 7,500 ரூபாயையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள விபரங்களில் குறிப்பிட்டுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

பொருளாதார நன்மைகளை பொறுத்தமட்டில், ஹீரோ இருசக்கர வாகனங்களை வாங்கும்போது பிணையத்தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லையாம். இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹீரோ டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். இதேபோன்று மற்ற நிறுவனங்களும் நடைபெற்றுவரும் பண்டிகை காலத்திற்கான சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

இந்த வகையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அதன் சிட்டி செடான், ஜாஸ், டபிள்யூஆர்-வி மற்றும் அமேஸ் உள்ளிட்ட அதன் கார்களுக்கு ரூ.53,000 வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் இந்த அக்.31ஆம் தேதி வரையில் அமலில் இருக்குமாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் அதன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் ஸ்டீல்த் எடிசனை சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

ரூ.1,16,660 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்ட்ரீம் பைக் முழுவதும் அடர் மேட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை இந்த படங்களில் காணலாம். இந்த பிரத்யேகமான பெயிண்ட் உடன் இரட்டை டிஸ்க், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், எல்இடி விங்கர்ஸ், சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி, ஒருங்கிணைக்கப்பட்ட யுஎஸ்பி சார்ஜர், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் வெளிச்சத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, கியர் இண்டிகேட்டர் உள்ளிட்டவை புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டர் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம்!! சிவப்பு & கருப்பு நிறங்களில் பெறலாம்!

இவற்றுடன் ஆட்டோமொபைல் துறையில் பெருகிவரும் இணைப்பு தொழிற்நுட்பங்களின் தேவையை அறிந்து, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் ஹீரோ கனெக்ட் வசதியினையும் ஹீரோ நிறுவனம் கொண்டுவந்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் இந்த இணைப்பு தொழிற்நுட்பத்தினை ஹீரோ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hero Maestro Edge 110 launched in new colour in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X