அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) மேலும் ஓர் புதிய நாட்டில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக, புதிதாக ஓர் நாட்டில் தனது தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்ற புகழுக்கு சொந்தக்காரராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி உலகின் நம்பர் 1 இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகவும் இது காட்சியளிக்கின்றது.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென நமது நாட்டில் எப்போதுமே தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் சிலவற்றிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. அண்மையில் நிறுவனம் அதன் கடந்த 2021 நவம்பர் மாத விற்பனை நிலவரம் பற்றிய தகவலை வெளியிட்டது.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

இதன்படி, நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடும் சரிவைச் சந்தித்திருப்பதாகவும், அதேநேரத்தில், நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இது வெளிநாட்டு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு சற்றே அதிகரித்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஹீரோ நிறுவனம் தனது வெளிநாட்டு வர்த்தக எல்லையை மேலும் விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. புதிதாக அர்ஜென்டினா நாட்டிலும் தனது ஆதிக்கத்தைச் செலத்தும் விதமாக நிறுவனம், இந்நாட்டிலும் வர்த்தக பணிகளைத் தொடங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

இதன் அடிப்படையில் தனது முதல் விற்பனையகத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அர்ஜென்டினா நாட்டில் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. கிலேரா மோட்டார்ஸ் (Gilera Motors) உடன் இணைந்தே இந்த வர்த்தக விரிவாக்கம் பணியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

அர்ஜென்டினாவை மையமாகக் கொண்டு இயங்கும் மிக முக்கியமான மோட்டார்சைக்கிள் வாகன உற்பத்தி நிறுவனமாக கிலேரா மோட்டார்ஸ் இருக்கின்றது. இந்த நிறுவனத்துடன் கைக்கோர்த்துக் கொண்டே ஹீரோ மோட்டோகார்ப் அதன் தயாரிப்புகளை அர்ஜென்டினாவில் களமிறக்கியிருக்கின்றது.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

இந்நிறுவனத்தின் இந்த செயல் அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிற வாகன உற்பத்தியாளர்களுக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புதிய நாட்டில் கால் தடம் பதிப்புது பற்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குளோபல் பிசினஸ் பிரிவின் தலைவர் சஞ்சய் பன் கூறியதாவது,

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

"அர்ஜென்டினாவில் எங்களது செயல்பாடுகளை விரைவாக விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அக்டோபரில் கிலேரா மோட்டார்ஸ் உடனான எங்கள் புதிய கூட்டமைப்பை அறிவித்ததில் இருந்து நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

நாங்கள் ஏற்கனவே ஒரு விற்பனை மையத்தை அந்நாட்டில் திறந்துவிட்டோம். இத்துடன், அந்நாடு முழுவதும் விற்பனை மற்றும் சேவையை அதிகரிப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம். விரைவில் அர்ஜென்டிநா சந்தையை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய தயாரிப்புகலை அங்க களமிறக்க இருக்கின்றோம்" என்றார்.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

ஹீரோ நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை தங்களின் ஆலையில் தயாரிக்கும் பொருட்டு புவெனஸ் அயர்ஸ் (Buenos Aires) பகுதியில் அமைந்துள்ள ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியில் கிலேரா மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் அர்ஜெண்டினாவின் சாலைகளை ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பெருமளவில் ஆளுகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அர்ஜென்டினாவிற்கு புறப்பட்ட Hero நிறுவனத்தின் பைக்குகள்! இப்படியே போன உலகத்தையே ஆளும் போலிருக்கே!

அறிமுகத்தை முன்னிட்டு ஹீரோவின் பிரபல இருசக்கர வாகன மாடல்களான எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹங்க் 160ஆர் உள்ளிட்ட இருசக்கர வாகன மாடல்கள் களமிறக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், இன்னும் பல பிரபல தயாரிப்புகளைக் களமிறக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டிருக்கின்றது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜெர்மனி, கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் வர்த்தகப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Hero motoCorp expands its operations in argentina with gilera motors
Story first published: Friday, December 3, 2021, 19:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X