துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

துபாயில் புதிய டீலர்ஷிப் மையத்தினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திறந்துள்ளது. ஹீரோவின் முதன்மையான துபாய் டீலர்ஷிப் மையமாக விளங்கும் இதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

ஐக்கிய அரபு எமீரகத்தில் சில்லறை வணிகத்தை வலுப்படுத்தும் விதமாக, உலகின் மிக பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா துபாயில் புதிய பிரத்யேக டீலர்ஷிப் மையத்தினை திறந்துள்ளது.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

யுஏஇ-இல் ஹீரோ மோட்டோகார்பின் காலடித்தடத்தை வலுவாக பதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீலர்ஷிப் மையம் துபாயில், ஜூமேரா 1, 2வது டிசம்பர் தெருவில் உள்ள அல் கஸால் மாலில் திறக்கப்பட்டுள்ளது. 3எஸ் எனப்படும் விற்பனை, சேவை, உதிரிப்பாகங்களை வழங்கும் மையம் துபாயில் அல் குவோஸ் இண்டஸ்ட்ரியல் பகுதி 3, எண்.318 இடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

625 சதுர அடியில், ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்த புதிய துபாய் டீலர்ஷிப் மையத்தில் காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரு சேவை குழுக்களை கொண்ட பட்டறை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த-இன்-கிளாஸ் விற்பனைக்கு பிந்தைய அனுபவத்தையும், உதிரி பாகங்களையும் வழங்கும்.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உலகளாவிய வணிகத்திற்கான முதன்மை அதிகாரி சஞ்சய் பான் கருத்து தெரிவிக்கையில், எங்களது உலகளாவிய விரிவாக்க திட்டங்களில் வளைகுடா பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு உலக தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டுவந்து உற்சாகப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய விரிவான ஆதரவை வழங்குவதிலும், யுஏஇ சந்தையில் தொடர்ந்து விரிவடைவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்றார். மேலும் இந்த டீலர்ஷிப் திறப்பு நிகழ்ச்சியின்போது, 100 ஹீரோ மோட்டோகார்ப் மோட்டார்சைக்கிள்கள் எஸ்.எஸ் டெலிவிரி சர்வீஸ் எல்.எல்.சி என்ற உணவு பொருட்கள் டெலிவிரி ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

துபாய் சந்தையில் முதன்முதலாக நுழைந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2018இல் ஆஃப்ரிவென்சர்ஸ் எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்தை விநியோகஸ்தரராக நியமித்தது. இந்த நிறுவனத்துடன் இணைந்து வளைகுடா அரேபிய நாடுகள் அனைத்திற்கும் சந்தையை விரிவுப்படுத்துவதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முனைப்புடன் உள்ளது.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

ஆறு டீலர்ஷிப்கள் & சேவை மையங்கள் மற்றும் 4 உதிரி பாக அவுட்லெட்கள் என 10 தொடு மையங்களுடன் இந்த அரேபிய நாட்டு சந்தைகளில் வேகமாக வளர்ந்துவரும் நெட்வொர்காக ஹீரோ மோட்டோகார்ப்பின் நெட்வொர்க் வளர்ந்து வருகிறது. வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவாத், குவாடார் மற்றும் சவுதி அரேபியா என்ற ஐந்து நாடுகளில் ஹீரோவின் இந்த 10 தொடு மையங்கள் அமைந்துள்ளன.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

இந்த அரேபிய நாடுகளில் மலிவான ஹீரோ இருசக்கர வாகனங்களில் இருந்து பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள்கள் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு இக்னிடர் 125, ஹங்க் 150, ஈக்கோ 150 & ஈக்கோ 150 கார்கோ என்பவை அடங்குகின்றன. இவற்றுடன் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமாக இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200, ஹங்க் 160ஆர் மோட்டார்சைக்கிள்களையும் இந்த வளைகுடா அரேபிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவர ஹீரோ நிறுவனம் தயாராகி வருகிறது.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

ஹீரோ மோட்டோகார்ப், ஆஃப்ரிவென்ச்சர்ஸ் உடன் இணைந்து வளைகுடா நாடுகளில் இலவச சேவை முகாம்கள், வாடிக்கையாளர் சந்திப்பு, பிராந்தியம் முழுவதும் உள்ள தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் வலுவான விற்பனைக்கு பின் ஆதரவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் வாடிக்கையாளர் மகிழ்ச்சியை உறுதி செய்வதில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

இவ்வாறான நடவடிக்கைகளினால் தான் இந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் மாடர்ன் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றான எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு இந்தியாவை தாண்டி வெளிநாட்டு சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

துபாயில் ஹீரோ மோட்டோகார்பின் புதிய டீலர்ஷிப் மையம்!! முதல் நாளே 100 பைக்குகள் டெலிவிரி

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளின் விற்பனை 2020 செப்டம்பரை காட்டிலும் 141 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தான் இந்த மோட்டார்சைக்கிளை துபாயிலும் விற்பனைக்கு கொண்டுவர ஹீரோ திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் புதிய நிறங்களுடன் 4-வால்வு வெர்சனை பெற்றிருந்த எக்ஸ்பல்ஸ் 200 தான் தற்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான அட்வென்ச்சர் பைக் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
HERO MOTOCORP INAUGURATES FLAGSHIP DEALERSHIP IN DUBAI.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X