இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் இணைப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மேலும் முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

இந்த நாள் ஸ்கூட்டர்களுக்கான நாள் என்று கூறுமளவிற்கு ஸ்கூட்டர்கள் குறித்த தகவல்கள் அதிகமாக இன்று வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. மின்சார வாகன தயாரிப்பில் குதித்திருக்கும் ஓலா நிறுவனம் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் தனது முதல் எலெக்டரிக் ஸ்கூட்டர் 10 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவலை இன்றைய தினம் வெளியிட்டது.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

இதைத் தொடர்ந்து, பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரை ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

இந்த தகவல்கள் வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகிய நிலையில் நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மிகக் கடுமையாக அப்டேட் செய்யப்பட்ட மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இந்திய இருசக்கர வாகன சந்தையை மேலும் அதகளப்படுத்தியுள்ளது.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

புதிய அப்டேட் செய்யப்பட்ட 125 சிசி ஸ்கூட்டர் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ட்ரம், டிஸ்க் மற்றும் கனெக்டட் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ட்ரம் வேரியண்டிற்கு ரூ. 72,250 என்ற விலையும், டிஸ்க் தேர்விற்கு ரூ.76,500 என்ற விலையும், கனெக்டட் வசதிக் கொண்ட வேரிண்டிற்கு ரூ. 79,750 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

புதுப்பித்தலின் அடிப்படையில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் புதிதாக புரஜெக்டர் எல்இடி மின்விளக்கு, முழு டிஜிட்டல் திறன் கொண்ட ஸ்பீடோ மீட்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ப்ளூடூத் இணைப்பு வசதியின் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்து உள்ளிட்டவை பற்றிய தகவலை நம்மால் பெற முடியும்.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

இத்துடன், திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் குறித்த தகவலை வழங்கும் வசதியும் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் ஹீரோ வழங்கியிருக்கின்றது. இது இருசக்கர வாகன பிரியர்களைக் கவரக்கூடிய ஓர் அம்சமாக காட்சியளிக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஹீரோவின் இணைப்பு தொழில்நுட்ப வசதியும் ஸ்கூட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

ஸ்டைலைப் பொருத்தவரை சற்று கூர்மையான வடிவமைப்பு ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இது உதவும். இந்த தோற்றத்திற்கு ஏதுவாக கூர் வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், முகப்பு பகுதி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

மேலும், இரு விதமான நிறங்கள், முகமூடி போர்த்தப்பட்டதைப் போன்ற இன்டிகேட்டர் மின் விளக்குகள், புதிய நிற தேர்வுகள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் கனெக்டட் வேரியண்டில் இரு சிறப்பு நிற தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

பிரிஸ்மேடிக் மஞ்சள் மற்றும் பிரிஸ்மேடிக் ஊதா ஆகிய நிற தேர்வுகளுடன் அது விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோன்று டிஸ்க் வேரியண்டானது கேண்டி பிளேசிங் சிவப்பு, பேந்தர் கருப்பு, பியர்ல் சில்வர் வெள்ளை, மேட் டெக்னோ நீலம், பிரிஸ்மேடிக் மஞ்சள் மற்றும் பிரிஸ்மேடிக் ஊதா ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

மற்றுமொரு வேரியண்டான ட்ரம் பிரேக் வசதிக் கொண்ட யமஹா ஃபஸ்ஸினோ 125ஆனது கேண்டி பிளேசிங் சிவப்பு, பேந்தர் கருப்பு, பியர் சில்வர் வெள்ளை மற்றும் மேட் டெக்னோ நீலம் ஆகிய நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வந்தது மேஸ்ட்ரோ எட்ஜ் 125! இதுவே இந்த வசதியை பெறும் முதல் ஹீரோ தயாரிப்பு!

நிறம் மற்றும் வசதிகளில் வேறுபட்டு காணப்படும் இந்த வேரியண்டுகளில் ஒரே மாதிரியான எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்6 தரத்திலான 124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7,000 ஆர்பிஎம்மில் 9 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 10.4 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

Most Read Articles
English summary
Hero MotoCorp Launches New ‘Connected’ Feature In Maestro Edge 125 Scooter. Read In Tamil.
Story first published: Thursday, July 22, 2021, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X