ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் மலிவான அட்வென்ச்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை பற்றியும், இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அனைத்து விதமான சாலைகளுக்கும் எடுத்த செல்லக்கூடிய அட்வென்ச்சர் பைக்குகளுக்கு மவுசு அதிகரிக்க துவங்கியதை அடுத்து, இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்த அட்வென்ச்சர் ரக பைக் தான், எக்ஸ்பல்ஸ் 200 ஆகும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் எக்ஸ்பல்ஸிற்கு எதிர்பார்த்ததை காட்டிலும் வரவேற்பு வலுபெற்று வருகிறது. இதன் புதிய 4 வால்வு வெர்சன், எக்ஸ்பல்ஸ் 200 4வி என்கிற பெயரில் கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,28,150 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

இந்த நிலையில் தற்போது புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கான முன்பதிவுகளை தற்காலிகமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுத்தி கொண்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்குகளின் டெலிவிரி பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதால், தற்போதைக்கு இதன் முன்பதிவுகளை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

மேலும், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை 45 நாட்களில் அதன் வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்வதில் தாங்கள் தீவிரமாக இருப்பதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் ஹீரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்ப எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் என்ஜின் அமைப்பில் 2 வால்வுகளுடன் கூடுதலாக 2 வால்வுகள் என மொத்தம் 4 வால்வுகள் பொருத்தப்படுகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கூடுதல் என்ஜின் வால்வுகளினால், சிறந்த மிட் & டாப்-எண்ட் ஸ்பீடு ரேஞ்சை இதன் 200சிசி ஆயில்-கூல்டு என்ஜின் வழங்குகிறது. 2-வால்வு என்ஜினை காட்டிலும் 6% அதிகமாக, அதிகப்பட்சமாக இந்த 4-வால்வு என்ஜின் 8,500 ஆர்பிஎம்-இல் 19.1 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 17.35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

எக்ஸ்பல்ஸ் 200 4வி அட்வென்ச்சர் பைக்கின் மற்றொரு முக்கியமான அம்சமாக நீண்ட டிராவலை கொண்ட சஸ்பென்ஷனை சொல்லலாம். இந்த பைக்கின் சஸ்பென்ஷன் டிராவல் முன்பக்கத்தில் 190மிமீ-லும், பின்பக்கத்தில் 170மிமீ-லும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் இந்த பைக்கின் முன்பக்கத்தில் அளவில் பெரியதாக 21-இன்ச்சில் ஸ்போக் சக்கரம் பொருத்தப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஆனால் பின்பக்கத்தில் அளவில் சற்று சிறியதாக 18-இன்ச்சில் ஸ்போக் சக்கரம் வழங்கப்படுகிறது. எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை ட்ரைல் நீலம், பிளிட்ஸ் நீலம் மற்றும் சிவப்பு ரைடு என்கிற மூன்று விதமான பிரத்யேக நிறத்தேர்வுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய தேவை போன்ற சில காரணிகளால் இருசக்கர வாகன விற்பனை சமீப மாதங்களாக அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதில் ஹீரோ மோட்டோகார்ப்பின் தயாரிப்புகள் மட்டும் என்ன விதிவிலக்கா. இருப்பினும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள் கடந்த அக்டோபரில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருந்தன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கடந்த அக்டோபரில் மொத்தம் 3,815 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020 அக்டோபரில் 54.27% குறைவாக 2,473 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. மற்ற ஹீரோ 2-வீலர்ஸின் விற்பனை குறைந்திருந்த சூழலில் எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் விற்பனை இத்தகைய வளர்ச்சியை பதிவு செய்திருப்பதற்கு நிச்சயமாக புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் வருகையும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளின் விற்பனை 13.04% கடந்த அக்டோபரில் அதிகரித்துள்ளது. ஏனெனில் 2021 செப்டம்பரில் மொத்தம் 3,375 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. தற்போது முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளில் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கினை தற்போதைக்கு புக் செய்ய முடியாது!! முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

முழு-டிஜிட்டல் தரத்தில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலினை பெறும் இந்த அட்வென்ச்சர் பைக்கில், எல்இடி விளக்கு அமைப்பு, இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக பொருத்தப்படுகின்றன. இதுதவிர, சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் உயரமான வைசர் உள்பட பல்வேறு வசதிகளையும் எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள் பெறுகின்றன.

Most Read Articles
English summary
Hero motocorp temporarily halted bookings for its new xpulse 200 4v
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X