Just In
- 6 hrs ago பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- 8 hrs ago வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
- 12 hrs ago ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
- 14 hrs ago இந்தியாவின் முதல் தங்க நிறம் கொண்ட ஸ்கார்பியோ!.. இந்த கலரும் அதுக்கு செம்ம எடுப்பா இருக்கு!
Don't Miss!
- Sports MI vs CSK : தொடக்க வீரராக களமிறங்காத ருதுராஜ்.. சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே.. சொதப்பலான திட்டம்!
- News சென்னை சென்ட்ரலில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. விற்க முயன்ற 2 பேரை காட்டிக்கொடுத்த கேமரா.. அதிரடி
- Movies அஜித், சூர்யா ரெஃபரன்ஸ்.. தடையே சொல்லாத தளபதி விஜய்.. கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளில் இதை கவனிச்சீங்களா?
- Lifestyle உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
- Technology புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?
புதிதாக டூவீலர் வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடப்பு 2021ம் ஆண்டில் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் மற்றும் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆம், நடப்பாண்டில் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. வரும் நாட்களிலும் பல்வேறு நிறுவனங்களுடைய வாகனங்களின் விலை உயரும் போல் தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா? நீங்கள் வாகனங்களின் விலை உயர்வு குறித்த செய்திகளை தொடர்ச்சியாக படித்து கொண்டிருப்பவர் என்றால், உங்களால் காரணத்தை மிக எளிதாக யூகித்து விட முடியும். இரு சக்கர வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், அதனை ஈடு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், எனவே விலையை உயர்த்துவது என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது.
அந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டு வகையான வாகனங்களின் விலையும் உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரவுள்ளது.
ஆனால் நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்துவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியது. அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதமும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்கள் விலை உயர்வை சந்தித்தன.
இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். அத்துடன் கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசும் அவ்வப்போது பொது போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து விடுகிறது.
ஊரடங்கு காரணமாக பேருந்து சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. அல்லது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது அனைவர் வீட்டிலும் சொந்தமாக ஒரு வாகனம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இத்தகைய இக்கட்டான நேரத்தில் வாகனங்களின் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருவது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனால் இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் இந்தியாவில் விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். எனவே தொடர்ச்சியாக விலை உயர்ந்தாலும், வாகனங்களின் விற்பனையில் பெரிய அளவில் சரிவு ஏற்படுவதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-
யாராவது பயன்படுத்திய அதே கார் மாடலை மீண்டும் வாங்குவாங்களா! இவரு வாங்கி இருக்காரு! தெய்வமாவே நினைச்சுட்டாரு!
-
எல்லா பக்கமும் கருப்பு மட்டும் தான்! இப்படியொரு காரை ரோட்டுக்கு கொண்டு போனால் எல்லார் பார்வையும் உங்க மேல தான்
-
அடுத்த வாரத்தின் முதல் வேலை நாளுக்காக நிறைய பேரு காத்திருக்காங்க! அதுல நீங்களும் ஒருத்தரா!