ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் கிளாமர் எக்ஸ்டெக் என்கிற பெயரில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள படத்தினை இந்த செய்தியில் காண்போம்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

ஹீரோவின் புதிய 125சிசி மோட்டார்சைக்கிளாக வெளிவரவுள்ள கிளாமர் எக்ஸ்டெக் பைக்கில் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம் என்கின்றனர். தற்போதைய ஹீரோ கிளாமர் பைக்கின் அடிப்படையில் தான் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் இருக்கும்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

ஆனால் கிராஃபிக்ஸ், நிறங்கள், டிசைன் மற்றும் வசதிகளில் எக்ஸ்டெக் மாடல் மாடர்னானதாக விளங்கும் என்பது தற்போது இன்ஸ்டாகிராமில் நமக்கு கிடைத்துள்ள இந்த படம் மூலம் தெளிவாகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் இந்த புதிய மோட்டார்சைக்கிளிற்கு முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை வழங்கவுள்ளதாம்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

இந்த கன்சோலை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் வசதியை ஹீரோ கொண்டுவரவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். மேலும், இதன் மூலம் ஓட்டுனர் ஒவ்வொரு திருப்பலுக்கும் நாவிகேஷனையும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பெறலாம்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

கிளாமர் டெக்னோ கருப்பு, கிளாமர் க்ரே நீலம் மற்றும் கிளாமர் க்ரே சிவப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் கிளாமர் எக்ஸ்டெக் இந்த ஒவ்வொரு நிறத்திலும் பளிச்சிடும் கிராஃபிக்ஸை பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் பெற்றுவரவுள்ளதாம்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

இவற்றுடன் தற்போது இணையத்தில் கசிந்துள்ள விபரங்கள் கிளாமரின் வழக்கமான 124.7சிசி என்ஜின் சற்று மேம்பட்டதாக கிளாமர் எக்ஸ்டெக்கில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. இந்த வகையில் பொருத்தப்படவுள்ள புதிய ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் கிளாமரை காட்டிலும் கிளாமர் எக்ஸ்டெக்கின் எரிபொருள் திறனை 2 சதவீதம் அதிகரிக்குமாம்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

ஆனால் இந்த என்ஜின் உடன் வழக்கம்போல் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் தான் இணைக்கப்படவுள்ளது. சஸ்பென்ஷன் & ப்ரேக் அமைப்புகள் பெரும்பாலும் ஸ்டாண்டர்ட் ஹீரோ கிளாமரில் இருந்துதான் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபரங்கள் அனைத்தும் கசிந்துள்ள செய்திகளின்படி தரப்பட்டவையாகும்.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

கிளாமர் எக்ஸ்டெக் குறித்து இதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் ஹீரோ நிறுவனம் வெளியிட்டவில்லை. அவ்வாறு ஒரு அறிவிப்பு வெளிவந்தாலும், மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் தான் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகமாகும் என்று உறுதியாக கூற இயலாது.

ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்-ஆ? பெயரே செம்மையா இருக்கே!! பைக் இப்படிதான் இருக்கும்...

கிளாமர் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 240மிமீ-இல் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 130மிமீ-இல் ட்ரம்-மும், சிபிஎஸ் உடன் பொருத்தப்படுகின்றன.

Most Read Articles

English summary
Hero Glamour Xtec Leaked Online: Key Features, Top Changes.
Story first published: Thursday, June 17, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X