இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கான விலைகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

ஹீரோ நிறுவனம் நிர்ணயித்துள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கான விலைகள் ரூ.10.11 லட்சத்தில் இருந்து ரூ.34.99 லட்சம் வரையில் உள்ளன.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

குறைந்தப்பட்சமாக 2021 அயர்ன் 883 பைக்கின் விலை ரூ.10.11 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கடுத்ததாக 48 பைக்கின் விலை ரூ.11.75 லட்சமாகவும், சாஃப்ட்டெயில் ஸ்டாண்டர்ட் பைக்கின் விலை ரூ.15.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

இவற்றிற்கு அடுத்தாக ஸ்ட்ரீட் பாப், ஃபேட் பாப், பான் அமெரிக்கா, பான் அமெரிக்கா ஸ்பெஷல், ஃபேட் பாய், ஹெரிடேஜ் கிளாசிக், எலக்ட்ரா க்ளைட், ரோடு கிங், ஸ்ட்ரீட் க்ளைட் ஸ்பெஷல் பைக்குகளின் பெயர்களை கீழேவரும் லிஸ்ட்டில் பார்க்கலாம்.

Harley-Davidson Price
Iron 883 ₹10.11 Lakh
Forty-Eight ₹11.75 Lakh
Softail Standard ₹15.25 Lakh
Street Bob ₹15.99 Lakh
Fat Bob ₹16.75 Lakh
Pan America 1250 ₹16.90 Lakh
Pan America 1250 Special ₹19.99 Lakh
Fat Boy ₹20.90 Lakh
Heritage Classic ₹21.49 Lakh
Electra Glide Standard ₹24.99 Lakh
Road King ₹26.99 Lakh
Street Glide Special ₹31.99 Lakh
Road Glide Special ₹34.99 Lakh

அதிகப்பட்ச விலையான ரூ.34.99 லட்சத்தில் ரோட் க்ளைட் ஸ்பெஷல் என்ற பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவு வர்த்தகத்தின் முதன்மை அதிகாரி ரவி அவலுர் கூறுகையில், ஹார்லி-டேவிட்சனின் 2021ஆம் ஆண்டிற்கான மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவுகளை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

இந்த லைன்அப் தற்போது பான் அமெரிக்கா அட்வென்ச்சர் ரக பைக்குகளின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது என கூறினார். 2020 செப்டம்பரில் இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நேரடி விற்பனை & தயாரிப்பு பணிகளை நிறுத்தி கொள்ளவதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

இதன்படி இந்தியாவில் இருந்த இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டின் தொழிற்சாலை மூடப்பட்டது. அதன்பின் அடுத்த அக்டோபர் மாதத்திலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கும் ஹார்லி-டேவிட்சனுக்கும் இடையே கூட்டணி உருவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

இதன் காரணமாக இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும், தற்போது புதிய விலைகளையும் வெளியிட்டுள்ளது.

இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இவைதான்!! அறிவித்தது ஹீரோ

விற்பனை செய்வதுடன் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கான சேவை & பாகங்களையும் ஹீரோ டீலர்களின் மூலம் பெறலாம். ஆனால் அனைத்து நகரங்களிலும் கிடையாது. இந்தியாவில் குறிப்பிட்ட 12 நகரங்களில் மட்டுமே.

Most Read Articles

English summary
Hero MotoCorp unveils prices of latest Harley-Davidson range.
Story first published: Thursday, April 29, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X