நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

ஹீரோ மோட்டோகார்ப்பின் மலிவான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான எக்ஸ்பல்ஸ் 200-இன் விற்பனை கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் அதிரடியாக 141% அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றி மாடலாக உருவெடுத்துவரும் எக்ஸ்பல்ஸ்200 அட்வென்ச்சர் பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.23 லட்சமாக உள்ளது. சமீபத்தில் தான் இதன் 4-வால்வு வெர்சன் ரூ.1.28 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

ரூ.46,000 மதிப்பிலான கூடுதல் ஆக்ஸஸரீகளுடனும் கிடைக்கும் இந்த ஹீரோ மோட்டார்சைக்கிள் உண்மையில் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களால் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இளம் தலையினரை வெகுவாக கவர்ந்துவரும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3,375 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையாகும் மற்ற ஹீரோ பைக்குகளுடன் ஒப்பிடுகையில் இது பெரிய எண்ணிக்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் அட்வென்ச்சர் பைக்குகள் விற்பனையை பொறுத்தவரையில் இதுதான் பெரிய எண்ணிக்கையே.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

மாதத்திற்கு மாதம் சந்தையில் விற்பனையாகும் எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 3,375 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளுடன் ஒப்பிடுகையில், 2020 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளின் எண்ணிக்கை சுமார் 141 சதவீதம் அதிகமாகும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

ஏனெனில் அந்த மாதத்தில் இந்த அட்வென்ச்சர் பைக் 1,398 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 199.6சிசி ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 18.08 பிஎஸ் மற்றும் 6500 ஆர்பிஎம்-இல் 16.45 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு தொடர்ச்சியான மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

சமீபத்திய எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கில் கூடுதலாக 2 கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின் பைக்கிற்கு வழங்கும் அதிகப்பட்ச ஆற்றல் 19.1 பிஎஸ் மற்றும் 17.35 என்எம் டார்க் திறனாக அதிகரித்துள்ளது. இந்த ஹீரோ அட்வென்ச்சர் பைக் ட்யூப்லர் டைமண்ட் ஃப்ரேமில் தயாரிக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

சஸ்பென்ஷனிற்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், 10 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. இவற்றுடன் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்ஸும் வழங்கப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

முன்பக்கத்தில் முழு எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பை பெறுகின்ற இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்மார்ட்போன் உதவியுடன் நாவிகேஷனை வழங்கும் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் பொருத்தப்படுகிறது. தற்சமயம் வெள்ளை, மேட் க்ரீன், மேட் க்ரே, ஸ்போர்ட்ஸ் சிவப்பு மற்றும் பாந்தர் கருப்பு என்ற ஐந்து விதமான நிறத்தேர்வுகள் இந்த ஹீரோ அட்வென்ச்சர் பைக்கிற்கு வழங்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

மறுப்பக்கம் எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கில் ட்ரைல் நீலம், ப்ளிட்ஸ் நீலம் மற்றும் சிவப்பு ரைடு என்ற நிறங்கள் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுதான், பல வெளிநாட்டு சந்தைகளில் ஹீரோ மோட்டோகார்ப் வலுவாக கால்தடம் பதிப்பதில் முக்கிய பங்காற்றிவரும் எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள்களை மேலும் உலகின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்வதை ஹீரோ மோட்டோகார்ப் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

அத்தகைய நகரங்களுள் ஒன்று தான் துபாய். துபாயில் வணிகத்தை விரிவுப்படுத்த தீவிரம் காட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் இந்த நகரத்தில் புதிய டீலர்ஷிப் மையம் ஒன்றினை திறந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டீலர்ஷிப் மையம் திறக்கப்பட்ட முதல் நாள் அன்றே 100 மோட்டார்சைக்கிள்களை துபாயை சேர்ந்த உணவு பொருட்கள் டெலிவிரி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை!! விற்பனை 141% அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இக்னிடர் 125, ஹங்க் 150, ஈக்கோ 150 & ஈக்கோ 150 கார்கோ உள்ளிட்ட 2-வீலர்ஸை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்கிறது. இவற்றுடன் தான் விரைவில் எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக்கையும் ஹங்க் 160ஆர் மோட்டார்சைக்கிளையும் சேர்க்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Xpulse 200 ADV motorcycle registered YOY growth in sales of 141%.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X