மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், தனது 200 சிசி அட்வென்ஜர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 (Hero XPulse 200) கேரள மாநிலத்தில் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளதாக இன்று (பிப்ரவரி 26) அறிவித்துள்ளது. இதன்படி கேரளாவில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 கடந்துள்ளது.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் ஆஃப்டர்சேல்ஸ் பிரிவின் தலைவர் நவீன் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா முழுவதும் பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என கூறப்பட்டுள்ளது.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை 10 ஆயிரம் யூனிட்கள் என்ற மைல்கல்லை கேரள மாநிலத்தில்தான் முதல் முறையாக கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ஆஃப் ரோடு அட்வென்ஜர் பைக்குகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில், 200 சிசி, ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலே இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

2020 இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் (Indian Motorcycle of the Year - IMOTY) விருதை, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 வென்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் பிஎஸ்-6 மாடல் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட காரணத்தால் இந்த பைக்கின் இன்ஜினுடைய பவர் மற்றும் டார்க் அவுட்புட் சற்றே குறைந்தது. பிஎஸ்-6 அவதாரத்தில் இந்த பைக்கின் இன்ஜின் 17.8 பிஎச்பி பவரையும், 16.45 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 157 கிலோ மட்டுமே.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த அட்வென்ஜர் பைக்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 திகழ்கிறது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் முன் பகுதியில் 276 மிமீ, பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதியையும் வழங்கியுள்ளது.

மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...

இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள், 1.15 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான அட்வென்ஜர் பைக்குகளில் ஒன்றாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் திகழ்கிறது.

Most Read Articles

English summary
Hero XPulse 200 Crosses 10k Sales Mark In Kerala - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X