பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

இந்தியாவின் 200சிசி ஸ்ட்ரீட் நேக்கட் ரக பைக் மார்க்கெட்டில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, இந்த பைக்கின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

இந்த நிலையில், இதன் பிஎஸ்-6 மாடல் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டீசரை வெளியிட்ட ஹீரோ மோட்டோகார்ப் இந்த பைக்கின் அறிமுகத்தை தள்ளிப்போட்டு வந்தது.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

இந்த நிலையில், ஒருவழியாக பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது ஹீரோ மோட்டோகார்ப் இணையதளத்தில் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கின் பிஎஸ்-6 மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

இந்த பைக்கின் தோற்றத்தில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வருகிறது. மூன்று விதமான வண்ணத் தேர்வுகளில் இந்த பைக் வர இருக்கிறது.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

இந்த பைக்கில் ஆயில்கூல்டு எஞ்சினுக்கு பதிலாக ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதன் 200சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.14 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

புதிய எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இரண்டு சக்கரங்களிலுமே டிஸ்க் பிரேக்குகள் இடம்பெறும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பமும் வழங்கப்படும்.

விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்-6 மாடல்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பைக் ரூ.1.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மாடலைவிட ரூ.10,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கிற்கு மாற்றாக இந்த பைக் நிலைநிறுத்தப்படலாம்.

Most Read Articles

English summary
Hero Motocorp is all set to launch new XPulse 200T bike with BS6 engine in India very soon.
Story first published: Friday, March 5, 2021, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X