இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றத்தில்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), அதன் பிரபலமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Xtreme 160R) மாடலும் ஒன்று. தனது இந்த தயாரிப்பிற்கு கூடுதல் புகழ் சேர்க்கும் வகையில் ஹீரோ நிறுவனம் புதிதாக 'சிறப்பு பதிப்பு' ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. 'எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன்' (Xtreme 160R Stealth Edition) எனும் சிறப்பு பதிப்பு மாடலையே நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1,16,660 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கையே தற்போது ஹீரோ நிறுவனம் விற்பனைக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கைக் காட்டிலும் சிறப்பு பதிப்பு ஸ்டீல்த் எடிசனில் என்னென்ன சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

மேட் கருப்பு நிறம், இரட்டை டிஸ்க் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் (ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம்) ஆகியவற்றை புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் பைக்கில் ஹீரோ வழங்குகின்றது. இத்துடன், வழக்கமான எக்ஸ்ட்ரீமில் இருந்து இது மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக எல்இடி விங்கர்கள், சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் ஆஃப் ஆகும் வசதி என பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

இத்துடன், யுஎஸ்பி சார்ஜர், எல்சிடி திரை (கியர் பொசிஷன் மற்றும் ஸ்பீடோ மீட்டர் கன்சோல் வசதிக் கொண்டது) ஆகியவையும் சிறப்பு பதிப்பு எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் பைக்கில் வழக்கமான எக்ஸ்ட்ரீமில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

160சிசி ஏர் கூல்டு எஞ்ஜினே எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசனில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 14 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். அதிகம் பிரீமியம் தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த பைக்கை உருவாக்கி இருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கை கூடுதலாக அலங்கரிக்கும் விதமாக ஸ்டீல்த் எனும் 3டி எம்பளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய தோற்றத்திலான எல்இடி ஹெட்லேம்ப், இன்டிகேட்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுமஸ்தான உடல்வாகை பிரதிபலிக்கும் வகையில் ப்யூவல் டேங்கில் சோல்டர் அணிகலன் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

இதுமாதிரியான இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மிகவும் கவர்ச்சியான வாகனமாக எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் காட்சியளிக்கின்றது. இந்த தீபாவளி பண்டிகையில் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இப்புதிய சிறப்பு பதிப்பு வாகனத்தை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த பைக் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

சிறந்த பயண அனுபவத்திற்காக எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் இணைந்து ஸ்மூத்தான பயண அனுபவத்தை வழங்கும்.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

இத்துடன் சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 276 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 220 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் மேலே கூறியதைப் போல் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், சிறந்த பயண அனுபவத்தை பெறும் வகையில் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவர முற்றிலும் கவர்ச்சியான தோற்றம்... Hero Xtreme 160R Stealth Edition விற்பனைக்கு அறிமுகம்!

அண்மையில் ஹீரோ நிறுவனம் அதன் பிளஷர் ஸ்கூட்டர் வரிசையில் புதிய பிளஷர்-ப்ளஸ் எக்ஸ்டெக் எனும் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் அனலாக் வேகமானி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போனை இணைக்கும் பட்சத்தில் செல்போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் பிற முக்கிய தகவல்களை விரல் நுணியில் பெற்றுக் கொள்ள முடியும்.

Most Read Articles

English summary
Hero xtreme 160r stealth edition launched in india at rs 116600
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X