தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கான தீபாவளி சிறப்பு சலுகையினை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

இந்தியாவில் நல்ல நேரம் பார்த்து புதிய பொருட்களை வாங்குவோர் ஏராளம். இதனால் தான் நம் நாட்டில் பெரும்பாலானோர் பண்டிகை காலத்தில் புது வாகனங்களை வாங்கவே விரும்புகின்றனர். இதற்கு ஏற்ப தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்டாக்கில் இருக்கும் தங்களது தயாரிப்புகளை விற்று தீர்க்க முயற்சிப்பது வழக்கம்.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

இதற்காக சில நிறுவனங்கள் ஏகப்பட்ட சலுகை & தள்ளுபடிகளையும் அறிவிப்பது உண்டு. அவ்வாறு தான் தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் அதன் பிரபலமான ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா 125-விற்கு 5% பணம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன்படி ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரையிலான பணத்தை சேமிக்க முடியும்.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

ஆனால் இதற்கு முக்கியமான நிபந்தனையை ஹோண்டா நிறுவனம் விதித்துள்ளது. அது என்னவென்றால், இந்த பணம் தள்ளுபடி சலுகையினை பெற வேண்டுமென்றால், வாடிக்கையாளர் தனது எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) க்ரெடிட் கார்டினை பயன்படுத்தி மாதத்தவணையில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்க வேண்டும்.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

அதாவது, இவ்வாறான முறையில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை சொந்தமாக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. மேலும், இதற்காக எந்த முன்தொகையினையும் செலுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ள HMSI நிறுவனம் அடைமானமும் தேவையில்லை, ஆவணங்களும் தேவையில்லை எனவும் கூறுகிறது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

ஆக்டிவா 125 ஸ்கூட்டரினை எந்தவொரு சிக்கலுமின்றி, இணையத்திலும் முன்பதிவு செய்யலாம் எனவும் இதுகுறித்து சமூக வலைத்தள பக்கங்களில் ஹோண்டா தெரிவித்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக விளங்கும் ஆக்டிவா 125 அதன் மெல்லிய, நேர்த்தியான தோற்றத்தினால் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

மெல்லிய தோற்றத்தை பெற்றிருந்தாலும் இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் இருக்கை அடியில் போதிய இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 169மிமீ ஆகும். அதாவது தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதி உள்ள உயரம் 169மிமீ ஆகும். ஆக்டிவா 125-இன் கெர்ப் எடை 111 கிலோவாக உள்ளது. வேகமானி, பயண தூரம், எரிபொருள் அளவு உள்ளிட்டவற்றை காட்டக்கூடிய அனலாக் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

இதனுடன் ஏசிஜி மென்மையான ஸ்டார்ட் அமைப்பு மற்றும் ஐடியலிங் ஸ்டாப்-ஸ்டார்ட் அமைப்பு உள்ளிட்டவற்றையும் இந்த 125சிசி ஆக்டிவா ஸ்கூட்டரில் ஹோண்டா வழங்குகிறது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124சிசி ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 8.18 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 10.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இதன் என்ஜின் உள்ளது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 3-விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணிக்கு ஸ்டாண்டர்ட்டாக ட்ரம் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 190மிமீ-இல் முன்பக்க டிஸ்க் ப்ரேக் தேர்வும் வழங்கப்படுகிறது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

இதில் இரும்பு சக்கரத்துடனான ஆக்டிவா 125 ட்ரம் ப்ரேக் வேரியண்ட்டின் விலை ரூ.73,203இல் இருந்து துவங்குகிறது. அதிகப்பட்சமாக ரூ.80,325 வரையிலான விலைகளில் இந்த ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் அலாய் சக்கரக்களுடன் டிஸ்க் ப்ரேக் ஸ்கூட்டருடன் கிடைக்கிறது. விற்பனையில் இந்த 125சிசி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஜூபிட்டர் 125 நேரடி போட்டியாக விளங்குகிறது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

ஜூபிட்டரின் விலைகளும் (ரூ.73,400 - ரூ.81,300) கிட்டத்தட்ட ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் அளவில் தான் உள்ளன. இதன் 124.8சிசி ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 8.04 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தகூடியதாக உள்ளது. பிஎச்பி ஆற்றலை ஹோண்டா ஆக்டிவா 125 சற்று கூடுதலாக பெற்றாலும், ஜூபிட்டர் 125 ஆனது கூடுதல் என்ஜின் டார்க் திறனை பெறுகிறது.

தீபாவளி நன்நாளில் ஆக்டிவா 125-ஐ வாங்கினால் ரூ.5,000 சேமிக்கலாம்!! அதுக்கு இந்த பேங்கில் அக்கௌண்ட் இருக்கனும்

ஆனால் இவை இரண்டின் எடையும் ஒன்றுக்கொன்று சற்று வேறுபடுவதால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்திறன் தான் இந்த இரு 125சிசி ஸ்கூட்டர்களில் கிடைக்கிறது. இருப்பினும் இருக்கை அடியில் பொருட்களை வைக்கும் பகுதியை ஜூபிட்டர் 125 ஸ்கூட்டர் அளவில் சற்று பெரியதாக பெறுகிறது. ஏனெனில் இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 2 முழு ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு 33 லிட்டர்கள் கொள்ளளவில் சேமிப்பிடம் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda Activa 125 Diwali Offers- Cashback Upto Rs 5,000.
Story first published: Thursday, November 4, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X