பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா.. இதற்கான செலவு எவ்வளவு?

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரை இளைஞர்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றியமைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

இந்திய இருசக்கர வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்று ஆக்டிவா ஸ்கூட்டரை எந்த சந்தேகம் இல்லாமல் நம்மால் கூறிவிட முடியும். இதையே மாதம் தோறும் வெளியாகும் இருசக்கர வாகன விற்பனைகுறித்து வெளியாகும் ரிப்போர்ட்டுகளும் உறுதி செய்கின்றன.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்கூட்டரையே இளைஞர் ஒருவர் தற்போது மின்சாரம் மற்றும் பெட்ரோலால் இயங்கும் வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றனர். இதனை பிறருக்கும் செய்து தருவதாக அவர் கூறி வருகின்றார். இது ஆக்டிவா ஸ்கூட்டர்கள் பிரியர்கள் மத்தியில் பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை ஹைபிரிட் வாகனங்கள் என அழைக்கப்படுகின்றது. இந்த வசதியை இதுவரை வாகன உற்பத்தி நிறுவனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே வழங்கி வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ஹைபிரிட் திறனை இளைஞர்கள் வழங்கியிருக்கின்றனர்.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

ஹோண்டா நிறுவனம்கூட இப்படி ஒரு திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடாத நிலையில் இந்த ஹைபிரிட் சம்பவம் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் அரங்கேறியிருக்கின்றது. மாற்றம் செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டரின் மதிப்பு ரூ. 58,500 என கூறப்படுகின்றது. இந்த தகவல் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

ஹைபிரிட் இருசக்கர வாகனமாக மாறியிருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்குறித்து இ-வீலர் வெளியிட்டிருக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த மாற்றத்திற்காக எந்தவொரு பெரிய வேலையும் இளைஞர் செய்யவில்லை என்பது நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆமாங்க, கூடுதலாக மின் மோட்டார் மற்றும் பேட்டரியைப் பொருத்துவதைத் தவிர வேறு எந்த பெரிய வேலைகளையும் அந்த இளைஞர் ஆக்டிவாவில் மேற்கொள்ளவில்லை. அதேசமயம், இதன் ஆக்சலரேஷன் கேபிளும் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிறிய திரை பேட்டரி மற்றும் அதன் சார்ஜ் அளவுகுறித்த முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் மின் மோட்டாரை இயக்கும் வகையில் இரு வழி கொண்ட ஆக்சலரேஷன் கேபிள் அது. இத்துடன், சில தனித்துவமான ஸ்விட்சுகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மின்சாரம் மற்றும் பெட்ரோல் தேர்வுகளை மாற்றிக் கொள்ளும் வகையில் அந்த ஸ்விட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

இதுபோன்ற மிக சிறிய சிறிய மாற்றங்களே செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன், பின் பக்க வீலில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் பேட்டரி ஸ்டோரேஜ் பகுதிக்குள் பொருத்தியிருக்கின்றனர். இந்த மிகக் குறைந்த வேலையே ஆக்டிவாவை ஹைபிரிட் வாகனமாக மாற்றியமைத்துள்ளது.

பெட்ரோலிலும் ஓடும், மின்சாரத்திலும் ஓடும்... ஹைபிரிட் ஸ்கூட்டராக மாறிய ஹோண்டா ஆக்டிவா... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?..

மின்சார திறனுக்காக 60வோல்ட் 20ஏஎச் லித்தியம் ஃபெர்ரஸ் ஃபாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு நேரங்கள் தேவைப்படும். மேலும், இதனை மின்மோட்டார் மோடில் இயக்கும்போது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

Most Read Articles

English summary
Honda Activa Converted Into Petrol-Electric Hybrid Scooter In India. Read In Tamil.
Story first published: Sunday, May 9, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X